‘மாவீரன்’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? படக்குழு அறிவிப்பு!

‘மாவீரன்’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? படக்குழு அறிவிப்பு!

Published on

மிழ்நாட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்த, ‘மாவீரன்’ படம் வெளிவந்த 25 நாட்களில் 89 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அந்தப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் அதிக வசூல் ஈட்டும் டாப் 10 நடிகர்கள் பட்டியலில் சிவகார்த்திகேயனும் ஒருவராக உயர்ந்துள்ளார். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, தமிழ்நாட்டின் முன்னணி கதாநாயகனாக மாறி இருக்கும் சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் சமீப காலமாக பல கோடி ரூபாய் வசூலை ஈட்டி வருகிறது. இதனால் அவருடைய வருமானமும் ஒவ்வொரு படத்திலும் பல கோடி ரூபாய் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜூலை மாதம் 14ம் தேதி, ‘மாவீரன்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் மற்றும் சரிதா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் காமெடியனாக வரும் யோகி பாபு காமெடிக்கு பஞ்சம் இல்லாத வகையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இந்தப் படத்தில் வில்லனாக வரும் மிஷ்கின் தனது தரமான நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதனால் இந்தப் படம் வெளியான நாள் முதலே தொடர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வந்தது. காமெடி மற்றும் திரில்லர் திரைப்படமான, ‘மாவீரன்’ வெளியான 25 நாட்களில் 89 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக அந்தப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், OTT விற்பனை, படத்தின் இதர வருவாய்கள் மூலம் இந்தப் படம் இன்னும் கூடுதலான தொகையை ஈட்டும் என்பதில் சந்தேகமில்லை.

logo
Kalki Online
kalkionline.com