ஒத்த ஓட்டு முத்தையா படம் ஸ்டைலிஷான தோற்றத்தில் கவுண்டமணி!

ஒத்த ஓட்டு முத்தையா 
ஒத்த ஓட்டு முத்தையா 

வுண்டமணி தற்போது ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில்  உள்ளது. இந்த படத்தில்  கவுண்டமணியின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

அரசியல் நையாண்டி என்றால் கவுண்டமணி பிரமாதப்படுத்தி விடுவார். தற்போது அரசியல் களம் கொண்ட ஒத்த ஓட்டு முத்தையா கதையில் ஹீரோ  என்றால் கேட்கவா வேண்டும் நகைச்சுவையை வாரி வழங்கி உள்ளார் என்கிறது படக்குழு. 

நக்கலான, லொள்ளு கலந்த காமெடி தருவதில்  கவுண்டமணிக்கு நிகர் கவுண்டமணிதான். பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் போதே தனக்கென ஒரு காமெடி பாதையை உருவாக்கி ரசிகர்களை கவர்ந்தவர். கவுண்டமணியின் நகைசுவை காட்சிகள் இன்றும் தொலைக்காட்சியில் விரும்பி பார்க்கப்படுகின்றன. 

நீங்கள் இதுவரை பார்க்காத கவுண்டமணியை பார்க்கலாம் என்கிறார் டைரக்டர் சாய் ராஜ் கோபால். வரும் 2024 ல் பாராளுமன்ற தேர்தல் வரும் சமயத்தில் ஒத்த ஓட்டு முத்தையா வருவது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வாங்க மணி சார் வெல்கம் 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com