சந்தானதிற்கு போட்டியாக உருவாகிறாரா  சதீஷ்?

 Santhanam - Sathish
Santhanam - Sathish

காமெடியன்கள் ஹீரோவாக நடிக்கும் ட்ரெண்ட் போல் இப்போது. நாகேஷ் காலத்திற்கு பிறகு இப்போது மீண்டும் நகைசுவை நடிகர்கள் ஹீரோவாக நடித்து வருகிறார்கள்.

நகைசுவை நடிகராக வலம் வந்த சந்தானம் கடந்த சில வருடங்களாக ஹீரோவாக மட்டுமே நடிக்கிறார். கடந்த வாரம் சந்தானம் நடித்து வெளியான வடக்குப்பட்டி ராமசாமி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. சூரி வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து திரும்பி பார்க்க வைத்தார்.   

கான்ஜூரிங் கண்ணப்பன்
கான்ஜூரிங் கண்ணப்பன்

இந்த வரிசையில் நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக இணைந்துள்ளார். நாய் சேகர், காஞ்சுரிங் கண்ணப்பன் திரைப்படங்கள் வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படத்தில் நுழைவதற்கு முன்பு சதீஷ் கிரேசி மோகனின் நாடகங்களில் நடித்துள்ளார். அதேபோல் நடிகர் விஜய்யுடன் சதீஷ் சில படங்கள் இணைந்து நடித்துள்ளார். காஞ்சுரிங் கண்ணப்பன் படத்தை  தனிப்பட்ட முறையில்  சதீஷிடம் விஜய் பாராட்டி உள்ளார். இந்த தகவலை சதீஷ் ஹீரோவாக நடிக்கும் வித்தைகாரன் இசை வெளியிட்டு விழாவில் பகிர்ந்து கொண்டார். 

வித்தைகாரன் திரைப்படம் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் மற்றொரு படமாக வெளிவர உள்ளது. காஞ்சுரிங் கண்ணப்பன் படம் தந்த வெற்றி வித்தை காரன் படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை சதீஷு க்கு தந்துள்ளது. விமான நிலையத்தில் நடக்கும் ஒரு திருட்டை மைய்யபடுத்தி நகைச்சுவை தளத்தில் வித்தைகாரன்  உருவாகி உள்ளது.

அறிமுக இயக்குநர் வெங்கி இப்படத்தை தயாரிக்கிறார். சிம்ரன் குப்தா சதீஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.  காமடியன்கள் ஹீரோவாக மாறிவருவதை போல வில்லன்கள் நகைச்சுவை நடிகர்களாக மாறி வருகிறார்கள்.

வில்லன் ஆனந்தராஜ் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.. டயலாக் டெலிவரி, நக்கலடிப்பது போன்ற சில விஷயங்களில் சதீஷ் நடிப்பில் சந்தானத்தின் சாயல் இருக்கும். ஒரு வேளை சந்தானத்திற்கு போட்டியாக உருவாகிறரா சதீஷ். அல்லது உருவாக்கபடுகிறாரா பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
‘கடைசி விவசாயி’ திரைப்பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடப்பட்ட தேசிய விருதை ஒப்படைத்த கொள்ளையர்கள்!
 Santhanam - Sathish

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com