ஹீரோவான புகழ்.. ஜூ கீப்பர் பட டீசர் வெளியீடு!

Pugazh
Pugazh

குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் புகழ் நடிப்பில் உருவாகி வரும் ஜூ கீப்பர் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் புகழ். பெண் வேடங்கள் போட்டு காமெடியில் அசத்தி வந்தார். தொடர்ந்து வந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். அந்த அளவிற்கு பிரபலமடைந்தார்.
இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தது. அயோத்தி, 1948 என பல படங்களில் துணை நடிகராக நடித்து அசத்தியிருப்பார். இந்த நிலையில் கடந்த குக் வித் கோமாளி சீசனில் புகழ் கதா நாயகனாக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வெளியானது. அதாவது விலங்குகளுடன் நடித்திருப்பதாகவும், அந்த படத்திற்கு ஜூ கீப்பர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி சமூகவலைதளத்தில் இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். புகழ் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் விஜய் சேதுபதி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் Mr Zoo keeperஆக புகழ் நடித்துள்ள நிலையில், காணாமல் போகும் புலிக்குட்டியை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. புகழுக்கு இந்தப் படத்தில் நடிப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் காணப்படுகின்றன. அதை அவர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளதும் தற்போது வெளியாகியுள்ள டீசரில் தெரியவந்துள்ளது. இதில் அன்பு காட்டினால் புலிகூட பசுதான் என்பது போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. ஜே4 ஸ்டூடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில், படம் மிகப்பெரிய பாராட்டுக்களை புகழுக்கு பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான முதல் நாளே இந்த டீஸர் டாப் டிரண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com