சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'கூலி' திரைப்படம், வெளியீட்டிற்கு முன்னரே ₹500 கோடி வசூல் செய்துள்ளதாக பரவும் தகவல்கள், தமிழ் திரையுலகில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாக திட்டமிடப்பட்டுள்ள இத்திரைப்படம், இப்போதே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
பொதுவாக, ஒரு படத்தின் வசூல் என்பது திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்னரே உறுதி செய்யப்படும். ஆனால், 'கூலி' திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம், சாட்டிலைட் உரிமம், இசை உரிமம், வெளிநாட்டு உரிமம் போன்ற பல்வேறு முன்கூட்டிய வியாபாரங்கள் மூலம் ₹500 கோடிக்கு மேல் ஈட்டியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, வெளிநாட்டு உரிமம் மட்டும் ₹81 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் ஓவர்சீஸ் பிசினஸ் 75 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா டிஸ்ட்ரிபியூஷன் ரைட்ஸ் 42 கோடி, கேரளா மற்றும் கர்நாடகா டிஸ்ட்ரிபியூஷன் ரைட்ஸ் 20 கோடி. தமிழ்நாட்டில் மட்டும் 100-ல் இருந்து 120 கோடி வரை டிஸ்ட்ரிபியூஷன் ரைட்ஸ் வாங்கி நார்த் இந்தியாவில் கிட்டத்தட்ட 50 கோடிக்கு வியாபாரம் உள்ளது. இதற்குப் பின் அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் 120 கோடி கொடுத்து கூலி படத்தை வாங்கியுள்ளது.
ரஜினிகாந்தின் நட்சத்திர பலம், லோகேஷ் கனகராஜின் தனித்துவமான இயக்கம், அனிருத்தின் இசை மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பு என அனைத்தும் 'கூலி' படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளன. இதனால், ₹350 முதல் ₹400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படம், வெளியீட்டிற்கு முன்னரே தனது பட்ஜெட்டை பல மடங்கு மீட்டுள்ளது.
இந்த அதிரடியான முன்கூட்டிய வசூல், 'கூலி' திரைப்படம் உலக அளவில் ₹1000 கோடி வசூல் சாதனையை தொடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ரஜினியின் முந்தைய படங்கள் படைத்த வசூல் சாதனைகள், லோகேஷின் தொடர்ச்சியான வெற்றிப் படங்கள் மற்றும் 'கூலி' படத்தின் மீதான ரசிகர்களின் அளவு கடந்த ஆர்வம் ஆகியவை இந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும் படத்தின் ரிவ்யு பொறுத்தே எதையும் முடிவு செய்ய முடியும். அதற்காக படம் வெளியாகும் வரை காத்திருப்போம்.