சியான் 62 படத்தின் அப்டேட்கள்... பெயர் அறிவிப்பு எப்போது தெரியுமா?

Chiyaan 62
Chiyaan 62

சித்தா படத்தின் இயக்குனரான அருண்குமார் சியான் விக்ரமின் அடுத்தப் படத்தை இயக்கவுள்ளார். விக்ரமின் 62வது படத்தின் அப்டேட் இந்த மாதம் தொடக்கத்தில் வெளியானது. இதனையடுத்து தற்போது படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்ற தகவலும் பெயர் எப்போது அறிவிக்கப்படும் என்ற தகவலும் வெளிவந்துள்ளன.

சியான் 62 என்று அழைக்கப்படும் இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். ரியா ஷிபு தயாரிக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு நடிக்கவுள்ளார் என்று முன்பே தகவல் வெளியானது. முதலில் குணச்சித்ர நடிகராக மலையாள சினிமாவில் வலம்வந்த இவர் பிற்பாடு ஹீரோவாக அறிமுகமானார். 100 படங்களுக்கு மேல் நடித்த இவர் 'பெரியத்தவர்' என்றப் படத்திற்காக தேசிய விருது வாங்கினார். அதிலிருந்தே தமிழ் சினிமாவில் எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு கூடியிருந்தது.

இதனையடுத்துதான் அவர் சியான் 62 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். சமீபக்காலமாக சினிமா துறையில் மலையாளத்திற்கும் தமிழுக்கும் நல்ல உறவு ஏற்பட்டு வருகிறது. இதற்கு முன்னரும் இருந்தது என்றாலும் கூட தற்போது அந்த உறவு வலுவடைந்தது என்றே கூற வேண்டும். ஆகையால்தான் இயக்குனர்களும் நடிகர்களும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வருகின்றனர்.  

இதையும் படியுங்கள்:
லோகேஷ் கனகராஜ் கருங்காலி மாலை போடுவதற்கு இதுதான் காரணம்... அவரே சொன்ன தகவல்!
Chiyaan 62

தற்போது சியான் 62 படத்தில் எஸ்ஜே சூர்யாவும் இணைந்துள்ளார் என்றச் செய்தி வந்தது. இதனையடுத்து டபுள் செய்திகள் தற்போது வந்துள்ளன. அதாவது விக்ரமின் அடுத்த சியான் 62 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 14ம் தேதி திருத்தணியில் தொடங்கவுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

அதேபோல் தற்காலிகமாகப் பெயரிடப்பட்ட சியான் 62 படத்தின் உண்மையானப் பெயரை படக்குழு ஏப்ரல் 17ம் தேதி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியான் 62 படத்தின் டபுள் அப்டேட்கள் ஏப்ரல் மாதத்திற்குள்ளேயே வெளியாகவுள்ளதால் விக்ரம் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பும் உற்சாகமும் கூடியுள்ளது. அதேபோல் இணையத்தில் வேகமாக இந்தச் செய்திகள் பரவி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com