டாடா படத்தின் நடிகர் கவினுக்கு விரைவில் திருமணமா?

kavin
kavin

பிரபல நடிகர் கவினுக்கு இந்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை தொட்டவர் நடிகர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். லிப்ட் படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான டாடா என படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கினார். இதில் கவினுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த அபர்ணா தாஸ், 'முதலும் நீ முடிவு நீ' ஹரிஷ் மற்றும் கே.பாக்யராஜ், வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பொதுமக்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்கள் பலரும் கவின் நடிப்பிற்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுகளை தெரிவித்தனர். திரையரங்கில் வெற்றியடைந்தது மட்டுமின்றி ஓடிடியிலும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.ஏற்கனவே இவருக்கு கனா காணும் காலங்களிலேயே பல ரசிகர்கள் பட்டாளம் உண்டு. சரவணன் மீனாட்சி சீரியல் மற்றும் பிக் பாஸ் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கவினுக்கு இந்த மாதம் ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து நடிகர் கவினோ அல்லது அவரது நெருங்கிய வட்டத்தினரோ இதுவரை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com