இருள் ஆளப்போகிறது - 'டிமாண்டி காலனி 2'!

டிமாண்டி காலனி 2
டிமாண்டி காலனி 2

கடந்த சில நாட்களாக 'இருள் ஆளப்போகிறது' என்ற படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.           ஒரு எதிர் மறையான வார்த்தை பல்வேறு மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் அஜய் ஞானமுத்து டீம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அருள்நிதி நடித்து வெளிவந்த 'டிமாண்டி காலனி' சிறந்த திகில் படமாக பேசப்பட்டது. மீண்டும் இந்த கூட்டணி 'டிமாண்டி காலனி 2' என்ற படத்தில் ஒன்று சேர்ந்துள்ளது.                     

அருள்நிதி
அருள்நிதி

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி, பிரியா பவானி சங்கர் நடிக்கும் 'டிமாண்டி காலனி 2' திரைப்படத்தின் நாற்பது சதவிகித படபிடிப்புகள் முடிவடைந்தது விட்டன. அருள் நிதி படம் என்றால் கண்டிப்பாக  வித்தியாசமான படமாக இருக்கும் என்ற எதிர் பார்ப்பு மக்களிடையே உள்ளது. இதை இப்படம் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்ப் போம். சாம் சி. எஸ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். தீபக் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.                 

இந்த படத்தின் போஸ்டரில் ஸ்கேன் செய்யும் வசதி உள்ளது. இதை ஸ்கேன் செய்தால் படத்தை பார்க்கும் புதுமையை செய்துள்ளார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com