அடுத்த வார ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் லிஸ்ட் இதோ!

ott release
ott release

ஒவ்வொரு வார இறுதியிலும் ஓடிடி ரிலீசாக பல படங்கள் வெளியாகி ரசிகர்கள் இடையில் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் படத்தின் லிஸ்ட்டை பார்க்கலாம்.

என்னதான் தியேட்டர்கள் இருந்தாலும் கொரோனாவுக்கு பிறகு ஓடிடியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் மையத்திற்கு மாற, அனைவரும் வீட்டில் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் வைத்திருக்கிறார்கள். தியேட்டரில் படம் பார்த்தாலும் கூட ஓடிடி ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். அப்படி இந்த வாரம் வெளியாகும் படங்களின் விவரங்களை பார்க்கலாம்.

தூதா

ஹாரர் த்ரில்லர் ஜேனரில் உருவான தூதா திரைப்படம் அமேசான் ப்ரைமில் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நாக சைதன்யா, பார்வதி, பிரியா பவானி சங்கர் முன்னணி கேரக்டரில் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இண்டியானா ஜோன்ஸ் அண்டு தி டயல் ஆஃப் டெஸ்டினி

தொல்பொருள் நிபுணர் இண்டியானா ஜோன்சிற்கு வரலாற்றை மாற்றும் கருவி கிடைக்கிறது. அதை தனது பேத்தியுடன் இணைந்து எப்படி பயன்படுத்தினார் என்பதை விறுவிறுப்பாக திரையில் கூறியுள்ளார்கள். இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகிறது.

மிஷன் ரானிகஞ்ச்

அக்சய் குமார், பரினிதி சோப்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. 1989-இல் ரானி கஞ்ச்சில் உள்ள நிலக்கரி சுரங்கத்திற்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது. அதற்குள் இருந்தவர்கள் எப்படி மீட்கப்பட்டார்கள் என்பதே படத்தின் கதை. மிஷன் ரானிகஞ்ச் டிசம்பர் 1ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவுள்ளது.

ஸரா ஹட்கே ஸரா பச்கே

குடும்பத்தை விட்டு வெளியேறி பிரதமர் திட்டத்தின் கீழ் புதிய வீடு வாங்கப்போகும் தம்பதியைப் பற்றிய கதை. முன்னணி கேரக்டர்களில் விக்கி கவுசால், சாரா அலி கான் நடித்துள்ளனர். ஜியோ சினிமாவில் இந்த படம் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகிறது.

டிடெக்டிவ் நைட் : ரோக்

ஜேம்ஸ் நைட் என்ற துப்பறிவாளர் கேரக்டரில் ப்ரூஸ் வில்லிஸ் நடித்துள்ளார். முகமூடி அணிந்த நபர்கள் கொள்ளையில் ஈடுபட அவர்களை நைட் பிடித்தாரா என்பதுதான் படத்தின் கதை. லயன்ஸ்கேட் ஓடிடி தளத்தில் இநத் படம் டிசம்பர் 1 ஆம்தேதி வெளியாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com