மிரள வைக்கும் 'டிமான்டி காலனி 2' ட்ரைலர்!

Demonte colony 2
Demonte colony 2
Updated on

அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் டிமான்டி காலனி 2 படத்தின் ட்ரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

2015ஆம் ஆண்டு வெளியாகி நடிகர் அருள்நிதியின் கரியரில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது டிமான்டி காலனி திரைப்படம். சிரிப்பும் ஹாரரும் கலந்து திகிலூட்டிய டிமான்டி காலனி திரைப்படம் கோலிவுட்டின் தரமான பேய் படங்களின் வரிசையில் ஒன்றாக அமைந்தது.

இந்நிலையில் சென்ற ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு சர்ப்ரைஸாக வந்து ஹாரர் ஜானர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. 7 ஆண்டுகளுக்குப் பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் ரெடியாகப் போகிறது என்ற அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. அருள்நிதியுடன் இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கரும் இணைந்துள்ள நிலையில், சாம் சி.எஸ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இருள் ஆளப்போகிறது எனும் பெயரில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது.

மேலும் முதல் பாகத்தில் அருள்நிதி மற்றும் நண்பர்கள் குழு டிமான்டி காலனி சென்று எடுத்து வந்த டாலர், அதனைத் தொடர்ந்து தொடரும் சிக்கல்கள், அமானுஷ்யங்கள், இறப்பு என கதை சென்று முடிவடைந்திருக்கும். அருள்நிதி இறப்பதும், டாலரை எடுத்துச் செல்ல டிமான்டி வருகை தருவதும் என முதல் பாகம் இரண்டாவது பாகத்துக்கு லீட் கொடுத்து முடிக்கப்பட்ட நிலையில், இந்த படம் விட்ட இடத்தில் இருந்தே தொடர்கிறது. அருள்நிதி சாகாமல் இருப்பது, அவரது ஆத்மா எங்கோ சிக்கி இருப்பது, அதற்கு தீர்வு தேடி புத்த பிட்சுக்கள், தேவாலயம் என பிரியா, அருண் பாண்டியன் இருவரும் பயணிப்பது என இந்த ட்ரெய்லர் சஸ்பென்ஸ் கலந்து அமைந்துள்ளது. மேலும் சாம்.சி.எஸ்சின் இசை இந்த படத்திற்கு கூடுதல் பலம் என்றே சொலல்லாம்.

இப்படி த்ரில்லர் ஜானர் ரசிகர்களின் ட்ரீட்டாக உருவாகியிருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைவரையும் மிரட்டியுள்ளது.

இதையும் படியுங்கள்:
எல்.ஐ.சிக்கு பதில் மாறிய பெயர்... புது டைட்டிலை அறிவித்த விக்னேஷ் சிவன்!
Demonte colony 2

ட்ரைலர் எப்படி இருக்கு?

ட்ரைலர் தொடக்கத்திலேயே அந்த செயின் எப்படியாவது அந்த வீட்டிற்குள் வந்துவிடும் என தொடங்குகிறது. வழக்கம் போல் காப்பாற்றும் கதாநாயகனாக அருள்நிதி மிரட்டியிருக்கிறார். உடன் பிரியா பவானி சங்கரும் அவருக்கு துணையாக எல்லாம் செய்கிறார். இறுதியில் பெரிய அபார்ட்மெண்ட்டில் இருந்து அருள்நிதி குதிக்க, கீழே மணலாக ஒரு பேய் முகம் கத்துகிறது. ட்ரைலரில் மிரள வைக்க இசையும் மெருகூட்டப்பட்டுள்ளது. மொத்தத்தில் ட்ரைலர் பார்க்கவே த்ரில்லாக அமைந்துள்ளது.

வெளியான முதல் நாளிலேயே டாப் ட்ரண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் என்றே சொல்லலாம்.

logo
Kalki Online
kalkionline.com