தனுஷ் இயக்க, விஷ்ணு விஷாலுடன் கைகோர்க்கும் மாஸ் நடிகர்! வேற லெவல் அப்டேட்!

தனுஷ் இயக்க, விஷ்ணு விஷாலுடன் கைகோர்க்கும் மாஸ் நடிகர்! வேற லெவல் அப்டேட்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

'வாத்தி', 'கேப்டன் மில்லர்' படங்களைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அந்தப் படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கிறார் என்ற நிலையில் தற்போது ஒரு மாஸ் நடிகரும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் நடிப்பில் தற்போது படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் எல்லாம் முடிந்து திரைக்கு விரைவில் வரவிருக்கும் படம்தான் 'வாத்தி'. இதைத் தொடர்ந்து 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இப்படத்தில் தனுஷ் முதன்முறையாக போலீஸாக நடிக்க, இவருடன் இணைந்து ப்ரியங்கா மோகன், ஜான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், தனுஷின் அடுத்த படமாக பார்க்கும்போது, அவர் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அப்படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் நிலையில் அவருடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு இன்னும் இசையமைப்பாளர் யாரும் கமிட் ஆகாத நிலையில், அனிருத்துக்கு அந்த வாய்ப்பு போகலாம் எனவும் அறியப்படுகிறது. 'வாத்தி', 'கேப்டன் மில்லர்' படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ்தான் இப்படத்தையும் தயாரிக்கிறது.

ஏற்கெனவே தனுஷின் இயக்கத்தில் 'பா.பாண்டி' வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இரண்டாவதாக அவர் இயக்குனர் அவதாரம் எடுப்பதால், எதிர்பார்ப்பு அதிகமானதுடன், தற்போது எஸ்.ஜே. சூர்யாவும் இப்படத்தில் இணைந்தால் படம் வேற லெவலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

logo
Kalki Online
kalkionline.com