தனுஷ் இயக்கத்தில் ஹீரோவாகிறார் மகன் யாத்ரா: தாத்தா ரஜினி பாணியில் பக்கா மாஸ் படம்!

தீவிர நடிப்பு, நடனப் பயிற்சியுடன் சிக்ஸ் பேக் உடலமைப்பை உருவாக்கும் யாத்ரா; விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
யாத்ரா
யாத்ராSource:dhanush instagram
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

நடிகர் தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவை கதாநாயகனாக அறிமுகப்படுத்த உள்ளார். இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை வேறு யாருமல்ல, தனுஷே தான் இயக்குகிறார். நடிகர் தனுஷ் ஏற்கனவே பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லிக்கடை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இப்பொழுது தன் மகன் யாத்திராவை கதாநாயகனாக வைத்து படம் இயக்க உள்ளார். அதற்காக யாத்ரா தற்பொழுது தீவிரமான நடிப்பு மற்றும் நடன பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

நடிகர் தனுஷ் தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட், டோலிவுட் மற்றும் ஹாலிவுட் என எல்லா மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, பாடகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். முன்னதாக தனுஷ் தனது சகோதரி மகன் பவிஷை 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளார். தற்போது தன் மகன் யாத்ராவை ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

அவர் இயக்கத்தில் வெளியான இட்லி கடை, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போன்ற இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பை பெற்றது. இதனால் ஒரு இயக்குனராக கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கும் தனுஷ் இப்பொழுது அவருடைய மூத்த மகன் யாத்ராவை வைத்து அடுத்த படம் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Dhanush Son Nethra
Dhanush Son Nethra

ஏற்கனவே தனுஷ் இயக்கிய 'ராயன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அவரது மூத்த மகன் யாத்ரா கேமராவைக் கையாண்ட புகைப்படங்கள் வைரலாகி இருந்தன. அடுத்ததாக தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தினுடைய பாடலில் சில வரிகளை அவர் எழுதியிருந்தார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் தீவிர நடிப்பு மற்றும் நடன பயிற்சிகள் மேற்கொள்வதாகவும், அவரை ஹீரோவாக தனுஷ் களமிறக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் யாத்ராவின் தாத்தா ரஜினிகாந்த் பாணியில் பக்கா மாஸ் கமர்சியல் என்டர்டெய்னராகவும் அப்படம் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படியுங்கள்:
வாரண்ட் விமர்சனம்: போலீஸ் ஸ்டேஷன் உள்ளே நடக்கும் அதிர்ச்சி ரகசியங்கள் என்ன?
யாத்ரா

இப்படத்தை R டேக் ஸ்டுடியோஸ் தயாரிக்க போவதாகவும், பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் முதற்கட்ட ப்ரோமோ படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீவிர பயிற்சியில் இருந்து வரும் யாத்ரா சிக்ஸ் பேக் உடலமைப்பை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

யாத்ரா ஹீரோவாக அறிமுகமாகும் புதிய திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 80களின் கிளாசிக் படங்களான 'பில்லா' மற்றும் 'முரட்டுக்காளை' போன்ற படத்தைப் போல் அதிரடி கமர்சியல் அம்சங்களைக் கொண்ட ஒரு மாஸ் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் மேலும் சில நட்சத்திரங்கள் நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com