தனுஷ் இரட்டை வேடப் படம்; நானே வருவேன்!

தனுஷ் இரட்டை வேடப் படம்; நானே வருவேன்!

Published on

-லதானந்த்

டிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வெளியாகவுள்ள படம் – ‘நானே வருவேன்”. இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில், சில தினங்களுக்கு முன் வெளியான 'வீரா சூரா' பாடல் ஏற்கனவே 8 நாட்களில் 8 மில்லியன் பார்வையாளர்கள் எனும் சாதனையைப் படைத்து உள்ளது.

விரைவில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் டீசர், தனுஷ் ரசிகர்களின் முன்னிலையில் ஒரு கொண்டாட்டத்துடன் மிகப் பிரமாண்டமாக ரோகிணி திரையரங்க  வளாகத்தில் LED திரையில் பிரத்தியேகமாக காட்சியிடபட்டது.

இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் இயக்குனர் : K செல்வராகவன், தயாரிப்பு : கலைப்புலி எஸ். தாணு, இசை : யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் : ஓம் பிரகாஷ், படத் தொகுப்பு : புவன் சீனிவாசன்!

logo
Kalki Online
kalkionline.com