Dhruv Vikram
Dhruv Vikram

பெண்கள் கல்லூரியில் துருவ் விக்ரம் பிறந்த நாள் விழா!

Published on

-லதானந்த்

தமிழ் திரையுலகின் இளம் நடிகர் துருவ் விக்ரம், சென்னையில் உள்ள கிறிஸ்துவ மகளிர் கல்லூரியில் 'Battle Fest 2022' என்ற பெயரில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அன்று அவர் பிறந்த நாள் என்பதை அறிந்த அந்தக் கல்லூரி மாணவிகள் கேக் வெட்டி கொண்டாடி வாழ்த்தி அசத்தினர்.

Cake
Cake

ஏராளமான இளம் பெண் ரசிகைககளை கொண்டிருக்கும் நடிகர் துருவ் விக்ரம், ரசிகைகள் மற்றும் மாணவிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, பாடலி பாடியும் அசத்தினார்.

அந்த மாணவிகளின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் சொந்த இசையில் வெளியான 'மனசே..' என்ற சுயாதீன இசை ஆல்பப் பாடலை பாடினார். அதையடுத்து மாணவிகள் கரவொலி விண்ணைப் பிளந்தது.

Dhruv Vikram with Students
Dhruv Vikram with Students

இதுகுறித்து அந்த மாணவிகளில் சிலர் தெரிவித்ததாவது:

‘’இன்று சர்வதேச இதய நாள். அந்நாளில் ஏராளமான இதயங்களை வென்ற துருவ் விக்ரமின் பிறந்த நாள் என்பது எவ்வளவு பொருத்தம்?! அத்துடன் அவர் எழுதிப் பாடிய ’மனசே..’ எனும் பாடல் எங்கள் மனதைக் கொள்ளையடித்து விட்டது’’ என்று அந்த கல்லூரி மாணவிகள் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தனர்.

logo
Kalki Online
kalkionline.com