துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் எப்போது? கவுதம் மேனன் கொடுத்த அப்டேட்!

துருவ நட்சத்திரம்
துருவ நட்சத்திரம்

டிகர் விக்ரம் நடித்துள்ள “துருவ நட்சத்திரம்” படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட படம் இது. இதில், நடிகர் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரீத்து வர்மா இன்னும் பலர் நடித்திருக்கின்றனர். Spy Thriller கதை பாணியில் உருவாகியுள்ள படம் தான் துருவ நட்சத்திரம். இந்த படத்தின் கதை பணிகள் கடந்த 2013ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. அதிகமாக காதல் படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இந்த ஸ்பை கில்லர் படத்தின் கதையை இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படத்தின் பணிகள் நடைப்பெற்று வந்தது.

ஆனால் அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், கடந்த சில நாட்களாக படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கக்கோரி ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள விஜய் ராகவேந்திரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், சிம்புவை நாயகனாக வைத்து “சூப்பர் ஸ்டார்” என்ற படத்தை இயக்குவதற்காக கவுதம் வாசுதேவ் மேனன் தங்களது நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டதாகவும், அதற்கு முன்பணமாக கடந்த 2018ம் ஆண்டு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் அளித்ததாக கூறியுள்ளார்.

ஒப்பந்தப்படி அந்த பட வேலைகள் நடைபெறாத நிலையில் வாங்கிய முன்பணத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் திருப்பித் தரவில்லை என மனுவில் குற்றம்சாட்டியிருந்தார். எனவே தம்மிடம் பெற்ற தொகையை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பணத்தை திருப்பி அளிக்கும்பட்சத்தில், துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடலாம் என நவம்பர் 22ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பணத்தை திரும்ப செலுத்தாததால், கவுதம் வாசுதேவ் மேனனால் இதுவரை படத்தை வெளியிடமுடியவில்லை.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கவுதம் மேனன் தரப்பில் வழக்கறிஞர் ரேவதி மணிகண்டன் ஆஜராகி, துருவ நட்சத்திரம் படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், இந்த வழக்கை மூன்று வாரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என கோரினார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை 3 வாரத்திற்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com