கமலை நேரில் சந்தித்தாரா விஜய்? போட்டோவின் பின்னணி என்ன?

கமல் விஜய்
கமல் விஜய்

மல்ஹாசனும் நடிகர் விஜய்யும் சந்தித்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து அவருக்கு அவரது ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதேபோல், கமல்ஹாசன் கொடுத்த பிறந்தநாள் பார்ட்டியில், நடிகர்கள் சூர்யா, சிவராஜ்குமார், அமீர்கான், துல்கர் சல்மான், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய்யும், கமல்ஹாசனும் ஒன்றாக எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், நடிகர் விஜய் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாரா என்றெல்லாம் கருத்து பதிவிட்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து விஜய், லோகேஷ் உள்ளிட்ட லியோ படக்குழுவினருடன் கமல்ஹாசன் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

leo team kamal
leo team kamal

லியோ டீமுடன் உலகநாயகன் நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினாரா என்று கேட்டால் அது இல்லை. இந்தப் போட்டோ லியோ ஷூட்டிங் ஸ்பாட் அல்லது டப்பிங் பணிகளின் போது எடுக்கப்பட்டது எனத் தெரியவந்துள்ளது.

லியோ திரைப்படத்திற்கு கமல் வாய்ஸ் ஓவர் கொடுத்ததால் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்கலாம் என தெரிகிறது.

விக்ரம் 2 உருவானால் அதில் விஜய்யும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும் என்பது போல, இப்போது வெளியான போட்டோவில் தெரிகிறது. இந்நிலையில், கமல், விஜய், லோகேஷ் ஒன்றாக இருக்கும் போட்டோவை LCU ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com