நடிகராக அறிமுகமாகும் தங்கர்பச்சான் மகன்; கவனம் பெறும் போஸ்டர்!

தங்கர் பச்சான் மகன் விஜித்
தங்கர் பச்சான் மகன் விஜித்

பிரபல இயக்குனர் தங்கர் பச்சானின் மகன் விஜித் அறிமுகமாகியுள்ள படத்தின் போஸ்டர் கவனம் பெற்று வருகிறது.

பிரபல இயக்குநரான தங்கர் பச்சான் பல வெற்றிப்படங்களை இயக்கியது மட்டுமல்லாமல், நடிக்கவும் செய்துள்ளார். இவரது பல படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது இவரது மகன் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். ஏற்கெனவே தந்தை இயக்கத்தில், ‘டக்கு முக்கு திக்கு தாளம்’ என்ற படத்தில் அறிமுகமாக இருந்தார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கிய இந்த படம், த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்த படம் பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

செங்கலம் புகழ் ஷாலி நிவேகாஸ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மைம் கோபி, அருள்தாஸ், சுபத்ரா ராபர்ட், தீபா மற்றும் சாய் வினோத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பேரன்பம் பெருங்கோபமும் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையும், தினேஷ் ஒளிப்பதிவும், ராமர் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்று வரும் நிலையில், இயக்குனர் தங்கர் பச்சான் இந்த போஸ்டரை பகிர்ந்து மகனின் கதாபாத்திரத்தை கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “படத்தில் கதாநாயகன் என் மூத்த மகன் விஜித் பச்சன். பாலுமகேந்திரா திரைப்பட பள்ளி மாணவர் சிவபிரகாஷ் இயக்கத்தில், இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக எனது மகன் கமிட்டான கதையை நான் கேட்கவில்லை என்றாலும், நான் அதைப் பார்த்தேன். மேலும் கதை சமூகத்தில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

இந்தப் படத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து அர்ப்பணிப்புள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பெரும் புகழுக்கும் வெற்றிக்கும் உரியவர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த குழுவினர் தொடர்ந்து தரமான படங்களை உருவாக்கி, இந்த தயாரிப்பை மகத்தான வெற்றியாக மாற்ற வேண்டும் என்ற நம்பிக்கையில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com