நடிகர் கார்த்தி சில நாட்கள் முன்பு ஜப்பான் பட ட்ரைலர் விழாவையும், தமிழ் சினிமாவில் தனது 25 படங்கள் முடித்ததை கொண்டுடாடும் விழாவையும் இணைத்து நடத்தினார் ’கார்த்தி 25’ எனும் தலைப்பில் மிக பிரம்மாண்டமாக நடத்தியிருந்தார்.
இந்த விழாவில் தன்னுடன் 25 படங்களில் பணியாற்றிய பல்வேறு கலைஞர்களை அழைத்து வாழ்த்து பெற்றார். ஆனால் கார்த்தியின் முதல் படமாகாவும் அவரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாகவும் அமைந்த பருத்தி வீரன் பட இயக்குநர் அமீர் இந்த விழாவில் பங்கு பெற வில்லை.
அமீரை அழைத்ததாக கார்த்திக் தரப்பில் சொல்லப்பட்டாலும், அமீர் நேற்று நடந்த விழாவில் மறுத்து இருக்கிறார். ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கி உள்ள படம் மாயவலை. இப்படத்தை அமீர் தயாரிக்கிறார். வெற்றி மாறன் வெளியிடுகிறார். இப்படத்தின் போஸ்டர் வெளியிட்டு நிகழ்வு நேற்று நடந்தது.
இந்த நிகழ்வில் பேசிய அமீர் "கார்த்தியின் 25 வது பட விழாவிற்க்கு என்னை அழைத்ததாகவும் நான் செல்ல வில்லை என்றும் வதந்தி பரப்புகிறார்கள். இப்படி சொல்பவரை என் கண் முன் வந்து சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். அழைத்திருந்தால் நான் கண்டிப்பாக சென்றிருப்பேன்.
எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் இட்ட விதை மரமாக வளர்ந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியே. வெற்றி மாறனின் வெற்றியில் நான் சவாரி செய்வதாக சிலர் சொல்கிறார்கள். சூப்பர் ஸ்டார்களுக்கும், தளபதிகளுக்குமே பிற மாநில ஸ்டார்கள் வெற்றிக்கு தேவைப்படுகிறார்கள்.
என் வெற்றிக்கு என் நண்பன் வெற்றி மாறன் தேவைப்படுவதில் தவறில்லை. இப்படத்தின் டைரக்டர் ரமேஷ் பாலகிருஷ்ணன் அதர்மம், பகைவன் போன்ற படங்களை இயக்கியவர். நீண்ட இடைவெளி இருந்ததால் இவருக்கு வாய்ப்பு தர யாரும் முன் வரவில்லை. அதனால் ரமேஷ் பாலகிருஷ்ணனுக்காக நானே தயாரிக்கிறேன்." என்றார்.
"என் வட சென்னை படத்தில் ராஜன் என்ற கேரக்டரில் நடிதார் அமீர். இதே பெயரில் மாயவலை படத்தில் நடிக்கிறார் அமீர். வட சென்னை ராஜன் உயிரோடு இருந்தால் எப்படி இருக்கும் என்ற பதில் மாயவலை படத்தில் இருக்கும் என்கிறார் வெற்றி மாறன். இப்படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆர்யா வின் தம்பி சத்யா ஹீரோவாக நடிக்கிறார். மாயவலை வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.