adhik ravichandran with ajith
adhik ravichandran with ajith

மார்க் ஆண்டனி வெற்றியை அஜித்திற்கு சமர்ப்பிக்கிறேன்: ஆதிக் ரவிச்சந்திரன்!

Published on

விஷால், S. J. சூரியா நடிப்பில் கடந்த வாரம் வெளியான மார்க் ஆன்டனி திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. S. J. சூரியாவின் நடிப்பு மிக நன்றாக இருப்பதாக கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். டைம் ட்ராவல் கதையில் புதுமையை புகுத்தி ஒரு மாறுபட்ட கமர்சியல் படமாக தந்துள்ளார் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன். 

இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த மீடியாக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் விஷால், S. J. சூரியா, மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் பேசிய டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் "இந்த படத்தின் வெற்றியை இப்பட குழுவினருக்கு சமர்ப்பிக்கிறேன். என் தனிப்பட்ட வெற்றியை முதலில் என் தாய் தந்தைக்கும், அடுத்ததாக அஜித் சாருக்கும் தெரிவிக்கிறேன் என்றார்.

நேர் கொண்ட பார்வை படத்தில் அஜித் சாருடன் பழகும் வாய்ப்பு வந்தது. பெரிய படங்களை இயக்கு உன்னால் முடியும் என்ற நம்பிக்கை தரும் வார்த்தைகளை சொல்லி எனக்குள் நம்பிக்கையை வளர்த்தார் அஜித் சார். அவர் தந்த நம்பிக்கை தான் என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது. எனவே என் தனிப்பட்ட வெற்றியை அஜித் சாருக்கு சமர்ப்பிப்பதுதான் சரியாக இருக்கும் "என்றார்.

logo
Kalki Online
kalkionline.com