
நடிகர் அஜித்துக்கு பயங்கரமான கதை வைத்திருப்பதாக இயக்குனர் அட்லி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக நண்பன், எந்திரன் திரைப்படத்தில் பணியாற்றியவர் அட்லி. அதன் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து முகப்புத்தகம் என்ற குறும்படத்தை இயக்கி வரவேற்பை பெற்றார். அதன் பிறகு ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி வரவேற்பை பெற்றார்.
ராஜா ராணி திரைப்படத்திற்கு கிடைத்து வரவேற்பின் மூலமாக முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கத் தொடங்கினார். இவ்வாறு நடிகர் விஜய் வைத்து மெர்சல், தெறி, பிகில் போன்ற திரைப்படங்களை கொடுத்து தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார்.
தற்போது நடிகர் ஷாருக் கானை வைத்து இயக்குனர் அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் இந்திய அளவில் மிகப் பெரிய அளவில் வெற்றியைப் பெற்று, ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்து சாதனை படைத்தது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக அட்லி தடம் பதித்து இருக்கிறார்.
இந்த நிலையில் அட்லி அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருப்பது, ராஜா ராணி திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா உதவியுடன் நடிகர் அஜித்தை சந்தித்து கதை சொன்னேன். நடிகர் அஜித்தும் அதை கேட்டுக் கொண்டார். அப்போது என்னை ஸ்கூல் பையன் மாதிரி இருக்கீங்கன்னு கிண்டல் செய்தார்.
நடிகர் அஜித்திற்கு பயங்கரமான கதை ஒன்றை வைத்திருக்கிறேன். அவர் ஓகே சொன்னா அடுத்த பணி அதுவாகவே இருக்கும்.
மேலும் ஒவ்வொரு படங்களின் உடைய வெற்றியும் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஒவ்வொரு படத்திலும் புதிய புதிய விஷயங்களை தகவல்களை கொடுக்க முயற்சிக்கிறேன் என்று கூறினார்.