பாலசந்தர் ஒரு காலத்தின் கண்ணாடி..!

Balachandar
Balachandar

இன்று ஜூலை மறைந்த இயக்குநர்க் கே. பாலசந்தர் அவர்களின் பிறந்த தினம்.1965 ல் நீர்க் குமிழி திரைப்படம் மூலம் ஒரு இயக்குநராக அறிமுகம் ஆனார். அன்றைய காலகட்டத்திலிருந்த பல கலைஞர்களைப் போலவே பாலசந்தர் அவர்களும் மேடை நாடகங்கள் மூலம்தான் சினிமாவிவிற்கு வந்தார்.மேடை நாடகங்களிலிருந்து வந்தாலும் சினிமாவிற்கு என்று தனி பாணியை உருவாக்கினார்.இவரது படங்கள் அன்றைய சமூக, அரசியல் பற்றிப் பேசும் கண்ணாடிகளாக இருந்தது.குறிப்பாக 70களின் இறுதியிலும்,80 களிலும் வந்த படங்களைச் சொல்லலாம்.அன்றைய நாட்களில் வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடியது. இந்த கருத்தை மையப்படுத்தி வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் இடது சாரி சிந்தனையுடன் சொல்லியிருப்பார். தண்ணீர் தண்ணீர் படத்தில் ஒரு சிறிய கிராமத்தில் குடி தண்ணீர் கிடைப்பதற்கு நடுவில் இருக்கும் அரசியலையும், அதிகார வர்க்கத்தின் மெத்தனப் போக்கையும் காட்டியிருப்பார். உண்மையைச் சொன்னதால் அன்றைய ஆளும் அரசால் படத்திற்கு நெருக்கடி வந்தது.அச்சமில்லை அச்சமில்லை ஒரு சராசரி மனிதனை அரசியல் எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.நடுத்தர குடும்பத்திலிருந்து வேலைக்குப் பெண்கள் செல்ல ஆரம்பித்த காலம் அது பணியிடங்களிலும், பொது வெளியில் இப்பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சனையை சரியாக பதிவு செய்திருப்பார். மனதில் உறுதி வேண்டும், அவள் ஒரு தொடர் கதை படத்தில் உருவாக்கிய நாயகி பிம்பத்தை சொல்லலாம். சிந்து பைரவி உட்பட சில படங்களில் பாலசந்தர் உருவாக்கிய பெண்கள் கதாபாத்திரத்திற்காக விமர்சிக்கப்பட்டதும் உண்டு. பாலசந்தர் இயக்கிய படங்கள் அனைத்தும் நாடக பாணி படங்களே. சினிமாவுக்கான இலக்கணம் கொண்டவை அல்ல என்று விமர்சனம் செய்தவர்களும் உண்டு. இருப்பினும் இவரின் பல படங்கள் பெரும்பான்மையான  மக்களால் விரும்பி பார்க்கப்பட்டன. இவரின் சாதனையைப்  பெருமைப்படுத்தும் விதமாக இந்திய அரசு தாதா சாஹிப் விருதை அளித்தது. தற்கொலைக்கு எதிரான வானமே எல்லை படத்தைத் தந்திருப்பார் பாலசந்தர். ஏக் தூஜே கேலியே படத்தில் தற்கொலை காட்சியைப் பார்த்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் இதற்கு பரிகாரமாக வானமே எல்லை படத்தை இயக்கியதாக பாலசந்தர் ஒரு நேர்காணலில் சொல்லி இருந்தார். தன் தவற்றை ஒப்புக் கொண்டு திருத்தி கொண்ட கே. பாலசந்திரன் பிறந்தநாளில் அவரை நினைவு கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com