"அமீரை சீண்டாதீர்கள்" கொந்தளித்த பாரதிராஜா!

அமீர் பாரதிராஜா
அமீர் பாரதிராஜா
Published on

ருத்திவீரன் படம் தயாரிப்பு பணிகள் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குநர் அமீர் குறித்த தெரிவித்த கருத்துக்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன்ஸ் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவானது பருத்திவீரன் திரைப்படம். இத்திரைப்படம் நடிகர் கார்த்திக்கு அறிமுக படமாகும். இதில் கார்த்திக்கு ஜோடியாக பிரியாமணி நடித்திருந்தார். மேலும் பொன்வண்ணன், சரவணன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலரும் படத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2 தேசிய விருதுகளை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படம் தொடர்பாக பேட்டியளித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குனர் அமீர் தன்னை ஏமாற்றியதாகவும், பருத்திவீரன் படத்திற்கு திட்டமிட்ட தொகையை விட கூடுதலாக 2.10 கோடி ரூபாயை செலவழித்ததாகவும், பொய் கணக்குகளை தயாரிப்பாளர் சங்கத்திடம் அமீர் வழங்கியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இதனால் கடுப்பான பலரும் அமீருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜாவும் அமீருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திரு.ஞானவேல் அவர்களே, உங்களுடைய காணொலியை பார்க்க நேரிட்டது. பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதர பிரச்சனை சார்ந்தது மட்டுமே. ஆனால் நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும், பெயருக்கும், படைப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கதக்கதாகும். உங்களை திரைத்துறையில் அடையாளப்படுத்தி, மிகப்பெரும் தயாரிப்பாளராக உருவாக்கியதில் அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்து விட வேண்டாம்.

பாரதிரஜா அறிக்கை
பாரதிரஜா அறிக்கை

பருத்திவீரன் திரைப்படத்திற்கு முன்பு அமீர் இரண்டு படம் இயக்கி, அதில் ஒன்றைத் தயாரித்தும் இருக்கிறார். அவர் உங்கள் படத்தில் தான் வேலை கற்றுக் கொண்டார் என்பதை எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது என் போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும்.

ஏனென்றால் உண்மையான படைப்பாளிகள் சாகும் அவரை கற்றுக்கொண்டேதான் இருப்பார்கள். நான் இப்போதும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன். மிகச் சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும்,அவர் நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து, பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என்று நம்புகிறேன், என்று கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com