மேடையில் அழுத இயக்குநர்.. எமோஷ்னலான இறுகப்பற்று படக்குழுவினர்!

Erukapatru movie
Erukapatru movie

டிகர் வடிவேலுவை வைத்து ’எலி’ படத்தை இயக்கி யுவராஜ் தயாளன் தற்போது கணவன், மனைவிக்கு இடையில் ஏற்படும் சைகலாஜி குறித்த ’இறுகப்பற்று’ படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு, ஷரத்தா ஸ்ரீநாத், விதார்த் ஆகியோர் நடித்துள்ளனர். படம் வரும் அக்டோபர் 6ம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு நிகழ்வில் பேசிய படத்தின் டைரக்டர் யுவராஜ் தயாளன் படத்திற்காக தான் சந்தித்த அனுபவங்களை சொல்லி மேடையில் அழுதது அங்கிருந்த படக்குழுவினரை எமோஷ்னல் ஆக்கியது.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் யுவராஜ் தயாளன் "என் முதல் படம் வடிவேலு சார் ஹீரோவாக நடித்த எலி திரைப்படம். படத்தின் பத்திரிகையாளர் காட்சி முடிந்து வெளியே வந்தவுடன் ஒரு பத்திரிகையாளர் கூட என்னிடம் பேசவில்லை. அப்போது படம் சரியில்லை என்று புரிந்து கொண்டேன்.அதன் பிறகு படம் இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. பல கம்பெனிகளுக்கு சென்று அவமானபட்டிருக்கிறேன் (சொல்லும் போது அழுகிறார் ) பல போராட்டங்களுக்கு பின் நண்பர் மூலமாக தயாரிப்பாளர் S. R. பிரபு தொடர்பு கிடைத்து இந்த படம் இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இறுகப்பற்று படக்குழுவினர்
இறுகப்பற்று படக்குழுவினர்

இந்த முறை தவறு செய்யவில்லை. கணவன் மனைவி அன்பை சொல்லும் படம் தந்திருக்கிறேன். விக்ரம் பிரபு சார் நடிக்க உடனே ஒப்புகொண்டதற்கு நன்றி என்று உணர்வு பொங்க பேசினார் "

 " தாத்தா வின் (சிவாஜி கணேசன் ) பிறந்தநாள் இந்த அக்டோபர் மாதம் இறுகப்பற்று படம் திரைக்கு வருகிறது. தாத்தாவின் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்திருப்பதாக நினைக்கிறேன். என் மனைவியின் பிறந்தநாளும் இந்த மாதம் வருகிறது. வாழ்க்கை துணையின் முக்கியத்துவத்தை சொல்லும் இறுகப்பற்று இந்த மாதம்  வெளியாவது செண்டிமெண்ட்டாக உணர்கிறேன். வாழ்க்கை துணையை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் படம் இது. இப்படத்தில் மாறுபட்ட விக்ரம் பிரபுவை பார்க்கலாம் "என்றார் நடிகர் விக்ரம் பிரபு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com