LCU-வில் இணைகிறாரா அல்லு அர்ஜுன்? மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்ட மாஸ் அப்டேட்!

Lokesh kanagaraj - allu arjun
Lokesh kanagaraj - allu arjun
Published on

தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத இடத்தை பிடித்துவிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். குறைந்த அளவில் படங்கள் இயக்கினாலும் அத்தனை படங்களும் கமர்சியல் ஹிட் கொடுத்தது என்றே சொல்லலாம். அதிலும் நடிகர் விஜய், கமல், ரஜினி என பெரிய நடிகர்களுடன் தான் படங்களை இயக்கியுள்ளார். இதனால் தற்போது கோலிவுட்டில் மிகப்பெரிய இடத்தில் இருக்கும் இயக்குனர்களின் லோகேஷ் கனகராஜும் ஒருவர்.

போதை ஒழிப்பை மையப்படுத்தி கதைகளை இயக்கி வரும் லோகேஷ் அதற்கு LCU என்று பெயரிட்டுள்ளார். முதல் படமான மாநகரமே ஹிட் அடித்த நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களும் ஹிட் கொடுத்தார். கடைசியாக ரஜினியின் கூலி படத்தை இயக்கியிருந்தார். அந்த வகையில் இந்த வரிசையில் தற்போது நடிகர் அல்லு அர்ஜூன் இணைந்துள்ளார். இது அவரின் இயக்கத்தில் 7வது படமாகும்.

பான் இந்தியா படமான புஷ்பா படம் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்கள் கூட்டத்தையும் அள்ளியவர் தான் நடிகர் அல்லு அர்ஜூன். தெலுங்கு திரையுலகில் முக்கிய இடத்தில் இருந்து வரும் அல்லு அர்ஜூன் ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். இப்படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தான் தற்போது வெளியாகியுள்ளது.

அதே போல் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி, பிரதீப் ரங்கநாதன் நடித்த டூட் படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அந்த படத்தை தயாரிக்கிறது. அல்லு அர்ஜுன் ஏற்கனவே தமிழ் இயக்குனர் அட்லீ படத்தில் நடித்த வருகிறார். அதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு தமிழ் இயக்குனருடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இதன் மூலம் அடுத்தடுத்து படங்களில் தமிழ் இயக்குனர்களுடன் கைகோர்த்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜுக்கு 75 கோடி ரூபாய் சம்பளமாக தரப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது அல்லு அர்ஜுனை இயக்கி வரும் அட்லீக்கு 100 கோடி ரூபாய் சம்பளமாக தரப்படுவது குறிப்பிடத்தக்கது. 

அல்லு அர்ஜுன் தற்போது அட்லீ இயக்கத்தில் ஒரு பிரம்மாண்டமான அறிவியல் (Sci-fi) படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு 2026 செப்டம்பருக்குள் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகே லோகேஷ் கனகராஜ் படத்தின் பணிகள் தொடங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com