நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் தணிக்கையில், சர்ச்சைக்குரிய வசனம் உட்பட 25 நொடிகள் நீக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து ஹிட் கொடுக்கும் லோகேஷ் கனகராஜ் படத்திற்கு ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ஏற்கனவே லோகேஷ் - விஜய் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இருவர் கூட்டணியிலும் லியோ திரைபப்டம் உருவாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி அதில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனங்கள், காட்சிகளால் விமர்சனத்துக்கு ஆளானது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்த ஆபாச வசனத்திற்கான முழு பொறுப்பையும் ஏற்றார்.
இந்நிலையில் படத்தின் தணிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, காட்சிகள் நீக்கம், ஒலி நீக்கம், மறுசேர்க்கை, காட்சிகளை மங்கலாக காட்டுதல் உள்ளிட்ட மாற்றங்கள் சுமார் 10 இடங்களில் செய்யப்பட்டுள்ளன.
ட்ரெய்லரில் சர்ச்சைக்குள்ளான வசனம் உட்பட 25 நொடிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, லியோ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட திரையரங்குகளுக்கு மத்திய தணிக்கை வாரியம் நோட்டீஸும் அனுப்பியுள்ளது.
தணிக்கை செய்யப்படாத டிரெய்லரை அனுமதியில்லாமல் திரையரங்குகளில் எப்படி வெளியிடலாம் எனவும் அதில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.