தேவர் மகனில் அடிவாங்கிய இசக்கி, மாமன்னனில் திருப்பி அடிக்கத் தொடங்கியுள்ளார்!

தேவர் மகனில் அடிவாங்கிய இசக்கி, மாமன்னனில் திருப்பி அடிக்கத் தொடங்கியுள்ளார்!

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளி வந்துள்ளது மாமன்னன். மாரி செல்வராஜ் இயக்கிய முந்தய படங்களில் பேசப்பட்ட பட்டியலின மக்கள் சந்திக்கும் அதே பிரச்சனைகள் தான் இந்த படத்திலும் பேசியிருக்கிறார்.

பரியேரும் பெருமாள், கர்ணன் படங்களில் ஆதிக்க சாதியினரால் பட்டியலின மக்களுக்கு நிகழ்த்தப்படும் அடக்கு முறைகள் பற்றி டைரக்டர் சொல்லியிருந்தார். மாமன்னன் படத்தில் கட்சிகளில் ஜாதி அரசியல் மைய்யமாக இருக்கிறது. தான் வளர்ந்த திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை விட்டு மாமன்னன் படத்தில் சேலத்தை கதை கள மாக வைத்துள்ளார் டைரக்டர்.

பட்டியலின வேட்பாளர் மட்டுமே போட்டியிட முடிந்த தனி தொகுதியில் நின்று வெற்றி பெறும் பட்டியல் இன வேட்பாளர் நடத்தபடும் விதம், ஆதிக்க ஜாதியினர் இந்த வேட்பாளர் மீது  கொண்டுள்ள பார்வை வழியே கதை நகர்கிறது. தலித் தலைவர்கள் தமிழ் நாட்டில் பல இடங்களில் பஞ்சாயத்து தலைவர்களாக வெற்றி பெற்றால் கூட, பொது கூட்டங் களில் அமர நாற்காலி கூட தரப்படுவது இல்லை என்ற செய்தியை நாம் செய்தி தாள்களில் படித்திருப்போம். இந்த படத்தில் மைய பிரச்சனையாக இந்த விஷயம் இருக்கிறது.

இந்த படம் முழுக்க பல்வேறு தலித் அடையாளங்களை பயன் படுத்தி உள்ளார் இயக்குனர். பெரியார், சே குவாரா, அம்பேத்க ர் என பல தலைவர்கள் புகைப்படங்கள் வருகிறது. குறிப்பாக புத்தரின் சிலை அடிக்கடி காட்சியில் வருகிறது..  நூலகத்தில் ஹீரோ அருந்ததியர் வரலாறு படிக்கிறார். படத்தின் முதல் இருபது நிமிடங்களில் தான் சொல்ல நினைப்பது இதுதான் என்று டைரக்டர் சொல்லி விடுகிறார். கதை எங்கேயும் திசை திரும்பாமல் ஒரு நேர் கோட்டில் செல்கிறது.

முந்தய படங்களில் இருப்பது போல யதார்த்தம் இல்லாமல் சினிமாதனமான விஷயங்கள் சில இருக்கிறது.உதாரணமாக ஹீரோ ஒருவரே பலரை அடித்து வீழ்த்துவதை சொல்லலாம். இருப்பினும் சொல்ல வந்த விஷயதத்தின் வீரியத்தையும், வலியையும் கடத்தி விடுகிறார் டைரக்டர். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு பல்வேறு காட்சிகளில் வித்தியாசமான ஒளிகளை காட்டி கதையுடன் ஒன்ற செய்கிறார்.ஏ ஆர். ரஹ்மான் இசையில் பின்னணியை விட பாடல்களே அதிகம் கவனம் பெறுகிறது.கொஞ்சம், சைக்கோதனம், கள்ள சிரிப்பு என ஒரு அட்டகாசமான வில்லனாக நடித்திருக்கிறார் பகத்  பாசில்.  முதல்வரே சொல்லியும் கேட்காத ஒரு அசால்ட்   நடிப்பை தந்துள்ளார். வடிவேலுக்குள் இருக்கும்  ஒரு நல்ல குண சித்திர நடிகரை நமக்கு காட்டியதற்கு இயக்குனரை பாராட்டலாம். எம். எல். ஏ. மாமன்னாக பொங்குவதும், ஜாதி பாகுபாட்டை ஏற்று கொள்ள முடியாமல் உள்ளே புழுங்குவதும் ஊர் மக்களை இழந்து அழும் போதும் தான் ஒரு நகைச்சுவை நடிகன் மட்டுமல்ல என்று நம்ப  வைத்துள்ளார்.

உதய நிதி ஜாதியை ஏற்று கொள்ளாத ஒரு சம கால இளைஞராக நடித்துளார். இந்த தலைமுறைகளுக்கே உள்ள வேகம், கோபம் என உணர்வுகளை சரியாக வெளி ப்படுத்தி இருக்கிறார். சமூக நீதிக்காக ஏற்படுத்தபட்ட கட்சிக்குள்ளேயே சமூக நீதி இல்லை என்ற கதையில் நடித்த தற்காகவே உதயநிதியை பாராட்டலாம். தோழியாக வரும் கீர்த்தி சுரேஷ் ஒரு வழி க்காட்டியைப் போல சிறப்பாக நடித்துளார். ஒரு சில காட்சிகளில் வந்தாலும் ஒரு பக்குவமான முதல்வரை கண் முன் காட்டியுள்ளார் லால். ஒரு அமைதியான நடிப்பை தந்துள்ளார். தேவர் மகனின் இசக்கி கேரக்டர்தான் மாமன்னன் என்கிறார் மாரி செல்வராஜ். தேவர் மகனின் இசக்கி எழுந்து நின்று திருப்பி அடித்தால் என்னவாகும் அதுதான் மாமன்னன்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com