இயக்குநர் ராஜமெளலியை விமர்சிக்கும் பழம்பெரும் நடிகை!

இயக்குநர் ராஜமெளலியை விமர்சிக்கும் பழம்பெரும் நடிகை!

சமீபத்தில் இயக்குநர் ரஜமெளலியின் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இதையொட்டி தென்னிந்திய ஊடகங்களில் தினமும் அவரைப் பற்றி பாஸிட்டிவ்வாகவும், நெகட்டிவ் ஆகவும் விமர்சனங்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. ராஜமெளலி 80 கோடி ரூபாய் செலவழித்து தான் ஆஸ்கார் விருதைப் பெற்றார் என்று ஒரு பக்கம் சிலர் கூப்பாடு போடுகிறார்கள். சிலரோ என்னிடம் அந்த 80 கோடு ரூபாயை கொடுங்கள் ஆஸ்கார் வாங்கத்தக்க 100 திரைப்படங்களை நான் எடுத்துத் தள்ளுகிறேன் என்கிறார் பொறாமை பிடித்த சக இயக்குனரும், தயாரிப்பாளருமான தம்மா ரெட்டி. இதெல்லாம் போதாது என இப்போது பழம்பெருமை நடிகை காஞ்சனாவும் ராஜமெளலி குறித்து ஒரு விஷயத்தை வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார். அவர் இதை ராஜமெளலி மீதான விமர்சனமாகவே பதிவு செய்ய விரும்புகிறார் என்பது அவரது வார்த்தைகளில் வெளிப்பட்ட ஆதங்கத்தில் தெளிவாகிறது.

நாட்டு நாட்டுவுக்கு விருது கிடைத்திருப்பது பற்றிக் கேள்வி கேட்டதற்கு, ராஜமெளலி ‘பாகுபலி 1&2 திரைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கையில் தன்னிடமும் ஏதோ ஒரு வேஷத்திற்காக 2 நாட்கள் கால்ஷீட் கேட்டதாகவும், அதற்கு சம்பளமாக ரூ 5 லட்சம் கேட்டதும், இந்தக் கதாபாத்திரத்துக்கு அவ்வளவு தொகை எல்லாம் தர முடியாது என்று கூறி விட்டு தன்னை புறக்கணித்து விட்டதாகவும் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார் நடிகை காஞ்சனா. இத்தனை பெரிய பட்ஜெட்டில் திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு இயக்குநருக்கு 5 லட்சம் ரூபாயெல்லாம் ஒரு பெரிய தொகையா? அனுபவமிக்க நடிகையான தனக்கு அந்த தொகையை ராஜமெளலியால் தர முடிந்திருக்காதா? ஏனோ மனமில்லை அவர்களுக்கு! என்னைப் போன்ற ஒரு நடிகைக்கு அந்த சம்பளம் கிடைத்திருந்தால் அது எத்தனையோ ஏழை எளிய மக்களுக்கு உதவிகரமாக இருந்திருக்குமே! இதெல்லாம் ராஜமெளலி யோசித்தாரா? என்று கேள்வி எழுப்புகிறார் காஞ்சனா.

அவர் கேட்பது நியாயமோ இல்லையோ?! அதை ராஜமெளலி தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆனால், நடிகை காஞ்சனாவைப் பொருத்தவரை அவர் பணத்தை பெரிதாகக் கருதக்கூடியவர் இல்லை என்பதற்கு சென்னை ஜி என் செட்டி சாலையில் அவர் திருப்பதி தேவஸ்தான டிரஸ்டுக்கு தானமாக அளித்த 15 கோடி ரூபாய்களுக்கும் மேலான நிலமே சாட்சி. தற்போது அவரது வேண்டுகோளின் படி அங்கு பத்மாவதி தாயாருக்கு கோயில் எழுப்பப்பட்டு கடந்த வாரம் கும்பாபிஷேகமும் ஆனது எல்லோருக்கும் தெரிந்த செய்தி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com