சுதா கொங்கராவின் அடுத்த படம்.. சூர்யா கேரக்டர் இதுதான்.. ரசிகர்கள் உற்சாகம்!

சூர்யா- சுதா கொங்கரா
சூர்யா- சுதா கொங்கரா

சுதா கொங்கராவின் அடுத்த படத்தின் சூர்யா ரோல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா சூர்யா கூட்டணியில் உருவான சூரரை போற்று படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு சூர்யா நடிப்பில் படம் வெளியாகவே இல்லை. இதனால் அவரின் 'கங்குவா' படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இப்படத்தின் ஷுட்டிங் கடந்த சில மாதங்களாகவே நடந்து வருகிறது. வரலாற்று ஜானர் பின்னணியில் மிரட்டலாக உருவாகி வருகிறது இப்படம்.

'கங்குவா' படமே ரிலீஸ் ஆகாத நிலையில் சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி விட்டது. அதன்படி சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 43 வது படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் 'சூரரைப் போற்று' படம் ரிலீசானது. தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்ற படங்களில் நடித்து வந்த சூர்யாவிற்கு இப்படம் நல்ல கம்பேக்காக அமைந்தது.

சூர்யா 43
சூர்யா 43

ஆனாலும் கொரோனா ஊரடங்கு காரணாக இப்படம் திரையரங்களில் வெளியாகாமல், நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் ரிலீசானது. தொடர்ந்து இவர்களின் கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் குறித்து தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி விரைவில் 'சூர்யா 43' படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், இப்படத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்ட காட்சிகள் இடம்பெற இருக்கின்றதாம். இதற்காக சூர்யா கல்லூரி மாணவராக நடிக்க உள்ள நிலையில், தற்போது தனது உடல் எடையை அதற்கேற்ப குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் சூர்யா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com