ஆரம்பமாகும் அரண்மனை 4ம் பாகம்!

Aranmanai 4
Aranmanai 4

மிழகமெங்கும் ரசிகர்கள் பலரை கவர்ந்த  பேய் படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்து மூன்று  பாகங்கள் வெளிவந்து  வெற்றி பெற்ற நிலையில், தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகம் விரைவில் வெளியாக  உள்ளது.

பென்ஸ்  மீடியா  பிரைவேட் லிமிடெட்  சார்பில் A.C.S அருண்குமார் மற்றும் அவனி  சினிமா சார்பில் குஷ்புவும் இணைந்து  தயாரிகிறார்கள். சுந்தர் சி நடித்து, இயக்கி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிட்டுள்ளனர்.

முதல் மூன்று பாகங்களின்  வெற்றியை தொடர்ந்து,  தற்போது நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திர கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு,கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், தீரஜ் விஷ்ணு ரத்தினம், S.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், உட்பட பெரும் எண்ணிக்கையிலான நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர.

2024 பொங்கல் அன்று வெளியாகவள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது மனைவி குஷ்புவின் பிறந்தநாளான அரண்மனை 4 படத்தின் போஸ்டரை கணவர் சுந்தர். C வெளியிட்டதை பலர் நகைச்சுவையாக பேசிவருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com