வல்லான் வகுத்ததே நீதி -வசந்த பாலன்!

வசந்த பாலன்
வசந்த பாலன்

தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்த பாலன் தற்போது அநீதி என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துளார். இயக்குனர் ஷங்கர் வழங்கும் இந்த படத்திற்கு ஜி. வி பிரகாஷ் இசையமைக்கிறார். அர்ஜுன்தாஸ், துஷாரா விஜயன் நடிக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதை களங்களை சொல்லும் வசந்த பாலன் நீதிக்கும் அநீதிக்கும் இடையில் நடக்கும் போராட்டங்களை சொல்ல வருகிறார். சந்திப்பில் பேசிய வசந்த பாலன்

"வல்லான் வகுத்ததே நீதி, எளியோருக்கு இங்கு அநீதி என்ற இந்த காலகட்டத்தில் நீதியை உரக்கச் சொல்ல இந்த 'அநீதி' திரைப்படம் வருகிறது. நீதி கிடைக்காதவர்கள் குரலாக இப்படம் ஒலிக்கும். எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை இது பிரதிபலிக்கும். மொத்த உலகமும் சிறு அன்பை எதிர்பார்த்தே சுழல்கிறது. அதை இப்படத்தின் மூலம் சொல்ல முயற்சித்துள்ளோம். நண்பர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இப்படத்தை தயாரித்துள்ளோம். இயக்குநர் ஷங்கர் சார் 'வெயில்' படத்தை தயாரித்து எனக்கு வாய்ப்பளித்தார் 'அநீதி' படம் குறித்து அவருக்கு தெரிவித்த போது, தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் அதை வழங்குவதற்கு வழி முன் வந்தார். அவருக்கு மிக்க நன்றி. இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்கி உள்ளார்கள். இவர்களை எல்லாம் ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி. அர்ஜுன் தாஸ் ஷாருக்கான் போன்று வருவார் என்று இங்கு கூறினார்கள். உண்மையிலேயே அவருக்கு அதற்கான திறமை இருக்கிறது. இந்த படத்தை எந்தவித சமரசமும் இல்லாமல் உருவாக்கி இருக்கிறோம், அனைவருக்கும் நன்றி."என்றார்.

அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான, வசந்த பாலனின் படைப்பான ‘அநீதி’, இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பாக தமிழ் மற்றும் தெலுங்கு ('பிளட் அண்டு சாக்லேட்') மொழிகளில் ஜூலை 21 அன்று வெளியாகவுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com