"மயில் போல பொண்ணு ஒன்னு" தங்கை பவதாரணியுடன் கடைசியாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த வெங்கட்பிரபு!

#Bhavatharini
#Bhavatharini

பிரபல பாடகி பவதாரணி உயிரிழந்த நிலையில், அவருடன் எடுத்த கடைசி புகைப்படத்தை பகிர்ந்து வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் சகோதரர் வெங்கட்பிரபு.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் செல்ல மகளான பவதாரணி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திடீரென மரணமடைந்தார். இவரின் மரண செய்தியால் திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. தந்தையான இளையராஜா, மகளின் இறப்பை தாங்கமுடியாமல் நொடிந்து போனார். அவர் அன்பு மகளே என்று வெளியிட்ட பதிவும் இணையத்தில் வைரலானது.

இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரனின் மகன்கள் தான் வெங்கட்பிரபு, பிரேம் ஜி. இவர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, பவதாரணிக்கு சகோதரர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் படங்களில் ஒன்றாக நடித்து வருவதும், இயக்குவதும், இசையமைப்பதும் என ஒற்றுமையாக இருந்துவந்தனர். இத்தனை சகோதரர்களுக்குள் பவதாரணி ஒருவர் தான் செல்ல சகோதரி ஆவார். பவதா என அவர்கள் அன்புடன் அழைப்பார்களாம்.

இந்த நிலையில் பவதாரணி இறுதி சடங்கில் இவர்கள் அனைவரும் ஒன்றாக மயில் போன பொண்ணு ஒன்னு பாடலை பாடி தங்கைக்கு பிரியாவிடை கொடுத்தனர். தற்போது தங்கையுடன் எடுத்து கொண்ட கடைசி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்து தன் வருத்தத்தை பகிர்ந்துள்ளார் வெங்கட்பிரபு.

இதையும் படியுங்கள்:
சிறுகதை – இந்திரா!
#Bhavatharini

இவர் தற்போது விஜய் நடிக்கும் கோட் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com