தொடரும் பருத்திவீரன் சர்ச்சை.. வாடிவாசலில் அமீர்? உறுதிப்படுத்திய வெற்றிமாறன்!

vetrimaran ameer
vetrimaran ameer

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தில் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.‌ பருத்திவீரன் பிரச்சனை தொடர்ந்து வந்தாலும் வாடிவாசலில் அமீர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் திரைப்படம் ‘வாடிவாசல்’. சூர்யா மற்றும் வெற்றிமாறன் முதன் முறையாக இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது. வெற்றிமாறன் தற்போது ’விடுதலை2’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

இன்னொரு பக்கம் நடிகர் சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவாவுடனான ’கங்குவா’ படத்தில் பிஸி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை வாடிவாசலில் சூர்யா காளைகளை அடக்குவது போன்ற இதன் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடந்தது. அடுத்த வருடம் தொடங்க இருக்கும் இந்தப் படத்தில் இயக்குநர் அமீர் இருப்பதை சமீபத்திய திரைப்பட விழா ஒன்றில் தெரிவித்தார் வெற்றிமாறன். தற்போது அமீர்-கார்த்தி-சூர்யா பிரச்சினை பருத்திவீரன் தொடர்பாக சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அமீர் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தற்போது பருத்திவீரன் படத்தை பற்றிய சர்ச்சைகள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

அப்படத்தின் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும், இயக்குனர் அமீருக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டது. இந்த மோதல் நீதிமன்றத்தில் வழக்கு போடும் வரை சென்றது. தற்போதும் இந்த வழக்கு நடைபெற்று தான் வருகின்றது. இது ஒருபக்கம் இருக்க தற்போது இந்த பிரச்சனை மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

அதற்கு ஞானவேல் ராஜா கொடுத்த பேட்டி ஒரு முக்கிய காரணம் எனலாம். அந்த பேட்டியில் அமீரின் மீது ஞானவேல் ராஜா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவும், அமீருக்கு ஆதரவாகவும் சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், சுதா கோங்கரா, கரு.பழனியப்பன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், வாடிவாசல் படத்தில் சூர்யாவுடன் அமீர் இணைந்து நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், இப்படத்தில் அவர் இருக்கிறார் என்பதை வெற்றிமாறன் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com