கண்குளிர ஐயப்பனை தரிசனம் செய்த விக்னேஷ்.. வைரலாகும் வீடியோ!

Vigneshsivan
Vigneshsivan

பரிமலை சென்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் ஐயப்பனை தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சங்கராந்தி தினத்தன்று சபரிமலை மகர ஜோதி விழா கொண்டாடப்படுகிறது. எனவே இது சபரிமலை மகரவிளக்கு அல்லது மகர ஜோதி என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இந்த ஜோதியை தரிசிக்க ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தியன்று லட்சக்கணக்கான மக்கள் சபரிமலை மலைக்கு வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மகர ஜோதி கட்டம் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை நடைபெறுகிறது

இந்த ஆண்டு பொதுவாகவே வழக்கத்தை விட அதிக கூட்டம் காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் நாளுக்கு நாள் திணறி வருகின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் மகர விளக்கு தினத்தன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது தரிசனம் செய்ய வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்தார். அப்போது அங்குள்ள குருக்கள் அவரை போக சொல்லி தள்ளிவிட்டனர். விக்னேஷ் சிவனும் கொஞ்ச நேரம் பார்த்து விட்டு போகிறேன் என கேட்டு தரிசனம் செய்தார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதே போன்று நடிகர் திலீப்பும் ஐயப்பனை தரிசனம் செய்து சென்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com