ஆபரேஷன் முடிந்து வீடு திரும்பிய அஜித் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? வைரலாகும் வீடியோ!

Ajith kumar
Ajith kumar

நடிகர் அஜித்குமார் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் அவரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். பப்ளிசிட்டியை பெரிதளவு விரும்பாத இவர், குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடுவார். தற்போது இவரது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்:
J.பேபியாக ஊர்வசியைத் தேர்ந்தெடுத்தது ஏன்? - மனம் திறக்கும் சுரேஷ் மாரி - நேர்காணல்!
Ajith kumar

வழக்கமான சிகிச்சை என்று கூறப்பட்ட நிலையில், பரிசோதனையில் அவரின் மூளையில் சிறிய கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு அன்றிரவே அறுவை சிகிச்சை மெற்கொள்ளப்பட்டு ஓரிரு நாட்களில் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் தற்போது அஜித் அவரின் மனைவி மற்றும் நண்பர்களோடு இணைந்து சகஜமாக பேசி கொண்டிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், எதுவும் நடக்காத மாதிரி மகனின் பள்ளிக்கு வந்திருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் குணமடைந்துவிட்டதாகவும் எழுதப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com