தல அஜித் சினிமாவிற்குள் நுழைந்தது எப்படி தெரியுமா?

Thala Ajith
Ajith Kumar
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், கடந்த சில தினங்களாக கார் ரேஸில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ஒரு நடிகர் தனக்குப் பிடித்த வேலைகளில் ஈடுபடுவது மிகவும் அரிதாகவே நடக்கும். இந்த அரிதான நிகழ்வுகளில் எப்பொழுதும் அஜித்தின் பெயர் இடம் பெற்றிருக்கும். கார் ரேஸ் நடக்கும் சமயங்களில் சினிமா ஷூட்டிங்கில் ஈடுபடப் போவதில்லை என்றும் அஜித் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சினிமாவில் நுழைவதற்கு முன்பு அஜித்தின் ஆசை என்னவாக இருந்தது? அவர் எப்படி சினிமாவில் நடிக்கத் தொடங்கினார் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

தனது திறமையான நடிப்பால் கோலிவுட்டில் நிலைத்து நின்ற நடிகர்கள் வெகு சிலரே. அதில் முக்கிய இடத்தில் இருப்பவர் தல அஜித்குமார். ஆசை, வாலி, அமர்க்களம், காதல் மன்னன், காதல் கோட்டை, தீனா, வீரம் மற்றும் வேதாளம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான துணிவு படமும் பெருவெற்றியைப் பெற்றது. அடுத்ததாக அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

ஒவ்வொரு நடிகரும் தனது சினிமா வாய்ப்புக்காக பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து உண்டு. அந்த வகையில்...

மேற்படிப்பு முடித்த அஜித், அவரது அப்பா விருப்பத்தால் குடும்பத் தொழிலில் ஈடுபட்டார். அதன்பின் தனது நண்பர்களுடன் இணைந்து டெக்ஸ்டைல்ஸ் ஷாப் வைத்தார். ஆனால், அதில் நஷ்டம் ஏற்பட்டதால் தொழிலை கைவிட்டார். அந்த சமயத்தில்தான் மாடலிங் துறையில் களமிறங்கினார் அஜித்.

மாடலிங் செய்துக்கொண்டிருக்கும்போது பி.சி.ஸ்ரீராம் கண்ணில் சிக்கினார் அஜித். இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளருமான பி.சி.ஸ்ரீராம் மோட்டார் சைக்கிள் தொடர்பான விளபரங்களை எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அஜித் குமாரைப் பார்த்து இவருக்கு ஹீரோ முகம் இருக்கிறது என்று சினிமாவுக்கு அழைத்தார். அப்படித்தான் அவருக்கு 1990ம் ஆண்டு வெளியான 'என் வீடு என் கணவர்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து 'அமராவதி' படத்தில் நடித்தார்.

இவருக்கு கிடைத்த மிகப்பெரிய ஆஃபர் தான் பிரேமபுத்தகம் என்ற தெலுங்கு படம். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மகன் எஸ்.பி.சரன் மூலமாக இந்த வாய்ப்பு கிடைத்தது. இது அஜித் குமார் நடித்த ஒரே தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தின் இயக்குநர் கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் இறந்ததால், படம் பாதியிலேயே தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, இயக்குநரின் தந்தை கொல்லப்புடி மாருதி ராவ் இப்படத்தை முடித்து வைத்தார். பல தடைகளைத் தாண்டி 1993 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படமான பிரேமபுத்தகம், 3 நந்தி விருதுகளை வென்று அசத்தியது. அஜித் நடித்த ஒரே தெலுங்கு திரைப்படமும் இதுதான். இதற்குப் பிறகு தான் இவருக்கு தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பே கிடைத்தது. படங்களில் நடித்த போதும், தனக்குப் பிடித்த பைக் மற்றும் கார் ரேஸில் அவ்வப்போது கலந்து கொண்டார்.

இதையும் படியுங்கள்:
தல இல்லை; கேப்டன் தான்! ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன ருசிகரத் தகவல்!
Thala Ajith

நடிகர் அஜித்திற்கு வெற்றிப் படங்களைக் காட்டிலும் தோல்விப் படங்களே அதிகம். இருப்பினும் ரசிகர்கள் இவரை பிரம்மாண்டமாக கொண்டாடுகின்றனர். இதனை ஒருமுறை அவரே சொல்லியிருக்கிறார். சினிமாவில் யாருடைய ஆதரவும் இன்றி, இந்த அளவிற்கு உயர்வது சாதாரண ஒன்றல்ல. இதனை அஜித் நிகழ்த்தி காட்டியிருக்கிறார். ஒருவேளை அஜித்திற்கு பிடித்தமான டெக்ஸ்டைல்ஸ் துறையில் அவர் வெற்றியைக் கண்டிருந்தால், தமிழ் சினிமா ஒரு மாஸ் நடிகரை இழந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லைதானே மக்களே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com