சூப்பர் ஸ்டார் நடிக்கும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா ?

சூப்பர் ஸ்டார் நடிக்கும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா ?

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் தேதியை டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் இணைந்து நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இதில், கன்னட முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். அதனைத்தொடர்ந்து ஜெயிலர் படத்தில் இணைந்த மலையாள நடிகர் மோகன்லால், நடிகை தமன்னா ஆகியோரின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது. ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சென்னையில் தொடங்கியது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். முத்துவேல் பாண்டியன் என ரஜினியின் கதாபாத்திரத்துக்கு இப்படத்தில் பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான டீசரும் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றது.

இது குறித்த ஒரு வீடியோவையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் நடிகைகள் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த படம், சுதந்திர தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 'ஜெயிலர்' படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் கன்னடம் மற்றும் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன் லால் இந்தியின் முன்னணி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். நடிகர் ரஜினி, ஸ்டைலாக காரில் இருந்து இறங்கும் காட்சி பலரை கவரும் வகையில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com