இவர்தான் பிரபல நடிகர் எஸ்.ஏ.அசோகன் மகனா? இது தெரியாம போச்சே!

S. A. Ashokan
S. A. Ashokan
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் எஸ்.ஏ.அசோகன். எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் சிறந்த வில்லன் நடிகராக பார்க்கப்பட்டவர் எஸ் ஏ அசோகன். இவரது நடிப்பில் வெளியான வில்லன் கதாபாத்திரங்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இவர் வில்லன் கதாப்பாத்திரம் மட்டுமின்றி பல குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து உள்ளார்.

இவரது நடிப்பை கண்டு பலரும் பிரமித்ததுண்டு. 70ஸ்,80ஸ் காலங்களில் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. இவரின் மகன் தற்போது பிரபல நடிகராக வலம் வருகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

அசோகன் மற்றும் அவரது மனைவி மேரிஞானம் இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள். அதில் இவரது இரண்டாவது மகனான வின்சென்ட் அசோகன் பிரபல நடிகர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? வின்சென்ட் அசோகன் அப்பாவை போலவே பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
மலையாள முன்னணி நடிகருடன் இணையும் மாளவிகா மோகன்! இது யாருமே எதிர்பார்க்கலையே!
S. A. Ashokan

வின்சென்ட் சரத்குமாரின் 'ஏய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு, இவர் கிட்டத்தட்ட 30 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தொட்டி ஜெயா, போக்கிரி, ஆழ்வார், யோகி, வேலாயுதம், சண்டமாருதம், மாரி 2, அரண்மனை 3 போன்ற படங்களில் வில்லனாக வின்சென்ட் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
சிங்கப்பெண்ணே: அன்பு அம்மாவா? இல்லை மகேஷ் அம்மாவா? ஆனந்தியை பெண் கேட்கப்போவது யார்?
S. A. Ashokan

வின்சென்ட் தமிழை தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவரது அப்பா அசோகன் ஆரம்பத்தில் இவரை சினிமாவில் இருந்து தள்ளியே வைத்துள்ளார். காரணம், இவர் நன்றாக படிக்கக் கூடியவர், இதனால் சினிமாவில் நடிக்க வருவதாக இருந்தாலும் படித்துவிட்டு சினிமாவிற்கு வா என கூறியுள்ளார். அதன்பிறகு, வின்சென்ட் பட்டப்படிப்பு முடித்து விட்டு சினிமாவுக்கு வந்ததாகக் கூறியுள்ளார். வின்சென்ட் சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். ஜி5 ஒடிடி தளத்தில் வெளியான சிங்கப் பெண்ணே என்ற வெப் தொடரிலும் நடித்து இருந்தார்.

யோகி படத்தில் நடித்ததற்காக 2009 ஆம் ஆண்டின் வின்சென்ட் சிறந்த வில்லன் நடிகருக்கான விருதையும் பெற்றார். தற்போது அம்ஜத் இயக்கத்தில் கத்திரி வெயில் படத்தில் வின்சென்ட் நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com