விடுதலை 2 ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

Viduthalai 2
Viduthalai 2

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை பாகம் 2 படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய செய்திகள் இணையத்தில் கசிந்துள்ளன. இதன்மூலம் இப்படம் பல முன்னணி நடிகர்களின் படத்துடன் மோதவுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாகக் கொண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து, கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான படம் விடுதலை பாகம் 1. சூரியுடன் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இணைந்து நடித்தனர். இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இப்படத்திற்கு முதன்மையான எதிர்பார்ப்பே, நகைச்சுவை நடிகர் சூரியை வைத்து எந்த மாதிரியான படத்தை வெற்றிமாறன் இயக்கப்போகிறார் என்பதே. இதுபோன்ற கேள்விகள் அனைத்திற்கும், அந்தப் படம் பக்காவான விடையளித்து அனைவருக்கும் பெரும் திருப்தியை வழங்கியது. இப்படத்தின் மற்றொரு ப்ளஸ் இளையராஜாவின் இசை. இவர் இசையில் பாடல்களும் ஹிட் அடித்ததால் படம் வசூலிலும் கெத்து காட்டியது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. வெற்றிமாறன், சூரி ஏதாவது நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டால், ரசிகர்களின் முதல்கேள்வி விடுதலை பாகம் 2 படம் எப்போது வரும் என்பதுதான். விடுதலை பாகம் 2 படத்தை எப்போதே தயார் செய்த வெற்றிமாறன் படத்தை வெளிநாடுகளில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெறச் செய்தார்.

இப்படியான நிலையில் விடுதலை பாகம் 2 ரிலீஸ் எப்போது என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றது. அதில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த வருட தீபாவளிக்கு அஜித் குமாரின் விடாமுயற்சி படமும் சூர்யாவின் கங்குவா படமும் வெளியாகவுள்ளதால், தற்போது சூரியின் விடுதலை பாகம் 2-ம் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
வெடித்து சிதறிய விமான என்ஜின்… பதறவைக்கும் வீடியோ…!
Viduthalai 2

சூரி நடிப்பில் ஹீரோவாக வெளிவரும் மூன்றாவது படம்தான் இது. ஆயினும், பெரிய நடிகர்களுடன் மோதவுள்ளார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான கருடன் படம், நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் 30 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது.

தொடர் வெற்றிப்படங்களை கொடுக்கும் சூரி அடுத்த மூன்றாவது படத்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com