கார்த்தியின் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

Sardar
Sardar

கடந்த 2022ம் ஆண்டு வெளியான கார்த்தியின் சர்தார் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு தேதி பற்றிய தகவல் கசிந்துள்ளது.

சர்தார் பாகம் 1ல், இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி. இப்படத்தில் ஸ்னேகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். கடைகளில் விற்கப்படும் நொறுக்குத் தீனி, வாட்டர் பாட்டில் போன்றவற்றினால் ஏற்படும் தீங்கினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், சமூகத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் ஹிட்டானது.

ஆகையால், சர்தார் படத்தின் பாகம் 2 எப்போது வரும் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து சர்தார் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நாளில் சர்தார் 2 படம் உருவாகவுள்ளது என்றும், அப்படம் ஒரு ஆக்ஸன் த்ரில்லர் படம் என்றும் கார்த்தி X தளத்தில் வெளியிட்டார். இதனால், சர்தார் 2ம் பாகம் உருவாகவுள்ளது அதிகாரப்பூர்வமானது.

அந்தவகையில் தற்போது சர்தார் 2 படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகள் முடிந்துவிட்டதாகவும், வரும் ஜூலை மாதம் படப்பிடிப்புத் தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. மேலும் இது கார்த்தி கெர்ரியரிலேயே அதிக பட்ஜெட் படமாக உருவாக இருக்கிறதாம். இப்படத்தின் ஷூட்டிங் இந்தியா, அஜர்பைஜான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.

படக்குழு இப்படத்தை பாலிவுட்டிலும் லாஞ்ச் செய்யத் திட்டமிட்டுள்ளது. மேலும் இரண்டு ஹிந்தி ஹீரோயின்களை இப்படத்தில் நடிக்க வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஆனால், இன்னும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தனி ஒருவன் 2 வில்லன் இவரா? மாஸ் நடிகரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இயக்குனர்!
Sardar

சர்தார் 1 ம் பாகம் படத்தை இயக்கிய மித்ரன்தான் இப்படத்தையும் இயக்கவுள்ளார். இவர் விஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இவருடைய கதைக்களம் அனைத்தும் சற்று வித்தியாசமாகவே இருக்கும். ஆகையால், சர்தார் 2 படத்தின் கதையும் மாறுப்பட்டிருக்கும் என்று ரசிகர்கள் கணிக்கின்றனர்.

சமீபக்காலமாக கார்த்தி நடிக்கும் படத்தைப் பற்றிய எந்தவொரு அப்டேட்டும் வராமல் இருந்தது. கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இதனையடுத்து நீண்ட காலத்திற்கு பிறகு கார்த்தியின் மெய்யழகன் படத்தின் அப்டேட் வெளியானது. இப்போது சர்தார் 2 படத்தின் தகவல்கள் கசிந்துள்ளன. இதனால், கார்த்தியின் கம்பேக்கிற்கான நேரம் வந்துவிட்டது என்பது மட்டும் உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com