பிரபாஸின் ’ஆதி புருஷ்’ எப்போது வெளியாகிறது தெரியுமா?

பிரபாஸின் ’ஆதி புருஷ்’ எப்போது வெளியாகிறது தெரியுமா?

பிரபாஸின் ’ஆதி புருஷ்’ ட்ரெய்லர் மே மாதம் 9 ஆம் தேதியும், ஜூன் 16 ஆம் தேதி திரைப் படமும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நீண்ட நாட்களாக இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 16-ம் தேதி வெளியாகிறது.

பிரபாஸின் ஆதி புருஷ், இந்த ஆண்டின் மிகப் பெரிய பான் இந்திய படங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் ஆதிபுருஷ் இந்திய இதிகாசமான ராமாயணத்தின் தழுவல் . ஆதிபுருஷ், தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

யுவி க்ரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ’ஆதிபுருஷ்’ படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, அதில் டி சிரீஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பில், அகில இந்திய அளவில் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் 'ஆதி புருஷ்' திரைப்படம், ட்ரெய்லர் மே மாதம் 9 ஆம் தேதி வெளியாகும் என்றும், திரையரங்குகளில் இப்படம் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது. நீண்ட நாட்களாக ஆதிபுருஷ் அப்டேட்டுக்காக காத்திருந்த பிரபாஸின் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com