வசூலில் கலக்கி வரும் ‘போர் தொழில்’ ஒடிடி வெளியீடு எப்போது தெரியுமா?

வசூலில் கலக்கி வரும் ‘போர் தொழில்’  ஒடிடி வெளியீடு எப்போது தெரியுமா?

இந்த ஆண்டு இளம் இயக்குநர்களின் படங்கள் வரிசையாக கவனம் ஈர்த்து மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகிய திரைப்படம் "போர் தொழில்'. புதுமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கி, அசோக் செல்வன், சரத் குமார் நடித்த ‘போர் தொழில்’ திரைப்படத்தின் ஒடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ், எப்ரியஸ் ஸ்டுடியோ அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘போர் தொழில்’. இந்த படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல், சரத்பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தரமான திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்த படங்களில் புதிதாக இணைந்துள்ள படம் போர் தொழில். விக்னேஷ் ராஜா என்கிற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கும் இப்படம் இரண்டு வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படத்தில் காவல் அதிகாரிகளாக அசோக் செல்வன், சரத் குமார் நடித்துள்ளனர்.

திருச்சியில் நடக்கும் தொடர் பெண் கொலைகளில் மூத்த காவல்துறை அதிகாரியான சரத்குமாரும், இளம் காவல் அதிகாரியான அசோக் செல்வனும் இணைந்து குற்றவாளியை கண்டுபிடிக்க முயலும் களமே திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. இருவரும் தங்களது கேரக்டருக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த கதையில் நடித்துள்ளனர்.

"போர் தொழில்'. திரைப்படம் ரூ.5.5 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இதுவரை ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஜூலை 7 ஆம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com