ஏன் மாளவிகா சிலம்பம் கற்கத் தொடங்கினார் தெரியுமா?

ஏன் மாளவிகா சிலம்பம் கற்கத் தொடங்கினார் தெரியுமா?

மாளவிகா மோகனன் தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்து வருகிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மும்பையை சேர்ந்தவர். ரஜினியின் பேட்ட படத்திலும், விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். இருப்பினும் சரியான வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அதனால் பல ஹீரோயின்கள் செய்வது போல கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி வலைதளங்களில் பரவ விட்டார். தற்போது இவரது திறமையை வெளிப்படுத்தும் வகையில் வாய்ப்பு வந்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் தங்கலான். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்கலான் படத்தில் விக்ரமின் கெட் அப் மிக வித்தியாசமாக உள்ளது. இது நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதை என்கிறார்கள். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் மாளவிகா மோகனன். இந்த படத்திற்க்காக சிலம்பம் பயிற்சி எடுத்து வருகிறார். ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டிடதத்தின் அருகில் சிலம்பம் செய்வது போல உள்ள புகைப்படங்கள் பல்வேறு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

தங்கலான் படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் மாளவிகா. கிளாமர் மட்டுமில்லாமல் ஹீரோக்கள் போல உடற்பயிற்சி, மார்ஷல் ஆர்ட்ஸ் என பல விஷயங்களை செய்கிறார் மாளவிகா மோகனன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com