‘அப்படி என்னை அழைக்காதீர்கள்’ வாரிசு பட இயக்குநர் வருத்தம்!

‘அப்படி என்னை அழைக்காதீர்கள்’ வாரிசு பட இயக்குநர் வருத்தம்!
Published on

டிகர் விஜய் நடிப்பில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு. இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் வம்சி. இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். வாரிசு படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வம்சி, “நடிகர் விஜய்யிடம் இந்தப் படத்தின் கதையை சொல்லும்போது, ‘உங்களது நம்பிக்கை நான் காப்பாற்றுவேன்’ என்று கூறியிருந்தேன். என்னை பலரும் ‘தெலுங்கு இயக்குநர்’ என்று கூறுகிறார்கள். அது என்னை மிகவும் காயப்படுத்துவதாக உள்ளது. நான் ஒரு தெலுங்கு ஆளோ அல்லது தமிழ் ஆளோ கிடையாது. நான் முதலில் ஒரு மனிதன். அனைத்து எல்லைகளையும் கடந்து செல்ல முயற்சிக்கும் ஒரு சாதாரண மனிதன் நான். தமிழ் மக்களின் மனங்களில் எனக்கும் ஒரு இடம் தந்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வாரிசு ஒரு பக்காவான தமிழ் படம் என நான் ஆரம்பத்திலிருந்து கூறி வருகிறேன். படம் முடிந்ததும் நான் அவரிடம், ‘சார் நீங்கள் ஹேப்பியா?’ என்று கேட்டேன். அவரும் ஹேப்பி என்றுதான் கூறினார். அதோடு அந்தப் படத்தைப் பார்த்து அவர் கண்ணீர் விட்டார். அது ஒன்றே எனக்குப் போதும். இது எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு தருணம்” என்று கூறியிருக்கிறார்.

இதே விழாவில் இசையமைப்பாளர் தமன் பேசும்போது, “வாரிசு எனக்கு முக்கியமான படம். என்றைக்காவது ஒரு நாள் விஜய் படத்துக்கு இசையமைத்துவிட வேண்டும் என கனவு கண்டு கொண்டிருந்தேன். அதோடு வாய்ப்பு கிடைத்து இசையமைக்கும்போது அது வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தேன். வாரிசு பட வெற்றி அனைவரின் உழைப்பாலும் கிடைத்த வெற்றி. இந்தப் படத்தின் மொத்த பாடல்களுக்காகவும் கடைசி பத்து நாட்கள் நாங்கள் இரவு பகல் பார்க்காமல் உழைத்தோம். அந்த உழைப்பை நடிகர் விஜய் அவ்வளவு அழகாக திரையில் கொண்டு வந்தார். அவரது நடனம்தான் அந்தப் படத்தின் பாடல்களுக்கு பெரிய பலம். இன்னும் பத்து வருடங்களுக்கு இந்த வெற்றி எங்களைத் தாங்கும்” எனக் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com