டபுள் ஆக்குபன்சி விமர்சனம்: பகலில் பெண், இரவில் ஆண் - இது என்ன விசித்திரமான மேஜிக்?

குஷ்பூ தயாரிப்பில், அஸ்வின் இயக்கத்தில் உருவான இந்த பேண்ட்டசி டிராமா ரசிகர்களைக் கவர்ந்ததா?
Double Occupancy | டபுள் ஆக்குபன்சி
Double Occupancy | டபுள் ஆக்குபன்சி
Updated on
ரேட்டிங்(2.5 / 5)

குஷ்பூ சுந்தர்.C இணைத்து தயாரித்திருக்கும் படம் டபுள் ஆக்குபன்சி. அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கி இருக்கும் வித்தியாசமான, ஜாலியான சயின்ஸ் பிக்சன் பேண்ட்டசி ரொமாண்டிக் டிராமா.

ஸ்பாய்லர் அலெர்ட்

திருமணம் ஆகி 15 ஆண்டுகளாகியும் ஒரு தம்பதிக்குக் குழந்தை இல்லை. கடவுள் நம்பிக்கையே இல்லாத கணவன் கடவுளை மனமுருகி வேண்ட ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால் நல்ல நேரத்தில் ஒரு கெட்ட நேரம் என்பது போலக் குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே இறந்து விடுகிறது. அந்தத் தம்பதி மீண்டும் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய மீண்டும் கடவுள் அருளால் உயிர் பெறுகிறது. ஆனால் பெண் குழந்தையாக...

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண், மாலை 6.01 லிருந்து மறுநாள் காலை 5.59 வரை ஆண் ஆக வளர்கிறது குழந்தை.

ஒரு கட்டத்தில் சாலை விபத்தில் அந்த தம்பதி மரணமடைய குழந்தை சென்னை வருகிறது.

Double Occupancy | டபுள் ஆக்குபன்சி
Double Occupancy | டபுள் ஆக்குபன்சி

பகலில் பெண், இரவில் ஆண் என்று வாழும் அந்தக் குழந்தை வளர்ந்த பின் சந்திக்கும் நடைமுறை வாழ்க்கை சிக்கல்களை முடிந்த வரை கலகலப்பாக, ஜாலியாக, கமர்சியலாக சொல்லி இருக்கிறார்கள்.

நாயகனாக சந்தோஷூம், நாயகியாக ரேஷ்மாவும் நடித்திருக்கிறார்கள். அதாவது வளர்ந்த குழந்தை ஆணாக இருக்கும்போது நாயகன் சந்தோஷ், பெண்ணாக இருக்கும்போது நாயகி ரேஷ்மா.

நாயகனாக வரும் சந்தோஷ் காதல், டான்ஸ், ஆக்சன் சீக்வன்ஸ் என புகுந்து விளையாடுகிறார். இவரது காதலியாக சம்யுக்தா கச்சிதம்.

நாயகியாக வரும் ரேஷ்மா வின் கண் பார்வை, உடல் மொழி அருமை. ஆடியன்சுக்கு நல்ல எமோஷனல் கனெக்ட் தருவதில் இவருக்கு வெற்றி.

நாயகியின் காதலனாக வரும் வினோத் லிஷன் உயிர்ப்பான நடிப்பு.

விடிவி. கணேஷ் ,பகவதி பெருமாள் இருவரின் பங்களிப்பும் அருமை.

ஒளிப்பதிவு சாந்தகுமார். அருமையான ஒர்க். ஆண் பெண்ணாக மாறும்போது கலரிங் கலக்கல் ரகம்.

எடிட்டிங் பிரவீன் ஆண்ட்டனி. பின் பாதியில் தொய்வு ஏற்படுவதைத்தவிர்த்திருக்கலாம். சாம் சி.எஸ்சின் இசையில் பாடல்கள், பின்னணி இசை ஓக்கே ரகம்.

சபாஷ் டைரக்டர்

  • முதல் பாதி படத்தில் வரும் கலகலப்பான காமெடிக் காட்சிகள் அருமை.

  • விடிவி கணேஷ் காமெடி டிராக் பெரிய பலம்.

  • அடல்ட் காமெடியாக எடுப்பதற்கு தகுதியான கதையை சாமார்த்தியமாக டீசண்ட் காமெடியாகத் தந்த விதம். தரக்குறைவான காட்சிகள், வசனங்களைத் தவிர்த்த விதம் அருமை.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: சாருகேசி - ஒய்.ஜி.மகேந்திரனின் வாழ்நாள் காவியம்!
Double Occupancy | டபுள் ஆக்குபன்சி

லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்

  • 2012ம் ஆண்டு வெளியான அமெரிக்கன் சோசியல் டிராமாவான The Beauty inside என்ற படத்தைத் தழுவி 2015ம் ஆண்டில் அதே டைட்டிலில் ஒரு சவுத்கொரியன் மூவி வந்தது. கதைக் கருவை இங்கே இருந்து தான் சுட்டிருக்கிறார்கள்.

  • எஸ்.ஜே சூர்யா நாயகனாக நடித்து இயக்கி இருந்த நியூ (2004) என்ற சயின்ஸ் பிக்சன் காமெடி டிராமா படத்தொ இருந்து கான்செப்ட் எடுத்திருக்கிறார்கள்.

  • காமெடியாக முதல் பாதியை சொன்ன இயக்குநர் பின் பாதியில் எமோஷனல் டிராமாவாக அமைப்பதில் திணறி இருக்கிறார்.

  • படத்தின் கிளைமாக்ஸ் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை. வலியத்திணித்த மாதிரி இருந்தது.

  • முதல் பாதியில் காமெடியில் கலக்கிய விடிவி கணேஷ் பின் பாதியில் காணாமல் போவது ஏனோ?

  • கடவுள் அருளால் பிறந்த குழந்தை என ஆன்மீகம் பேசி விட்டு பின் பாதியில் சுற்றி வளைப்பது ஏன்?

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+

சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - முதல் பாதி கலகலப்பான ஜாலி பட்டாசு. பின் பாதி சராசரி காதல் கதை. வித்தியாசமான கதைக்காகப் பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com