மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் என்பதை தாண்டி தென்னிந்தியாவில் மிக முக்கிய நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் நடிகர் துல்கர் சல்மான்.
அவரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சீதா ராமம் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வரவேற்பை பெற்றுது. இதனைத் தொடர்ந்து துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் 2023 -ஆம் ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் ஓரு திரை கொண்டாடத்திற்கு தயாராகி வருகிறார்கள் துல்கர் ரசிகர்கள்.
அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கும் ‘கிங் ஆப் கோதா’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் துல்கர் சல்மான்.ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ள கிங் ஆப் கோதா படத்தை ஜீ ஸ்டூடியோ மற்றும் wayforever பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். துல்கருடன் சர்பேட்டா படத்தில் நடித்த டான்சிங் ரோஸ், பிரசன்னா, ஐஸ்வர்யா லட்சுமி,ஷம்மி திலகன் என பலர் இணைந்து நடித்துள்ளார்கள். படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ரசிகர்களை ஈர்க்கும் வகையில், மாஸான ஒரு கமர்ஷியல் படத்திற்குரிய அனைத்து அம்சங்களையும் இப்படம் கொண்டுள்ளது. படத்தின் ஒவ்வொரு தகவலுக்காகவும், ரசிகர்கள் ஏங்கி வரும் வேளையில், இப்படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த அதிரடியான அறிமுக வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகளை ஒரு பென்சில் ஓவியம் போல வரைந்து வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு.
இந்த வீடியோவை நடிகர் துல்கர் சல்மான் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஓவியத்தில் துல்கர் சல்மானை ஒரு ராஜாவை போல வரைந்திருகிறார்கள். வரும் ஜூன் 28 அன்று படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது.தமிழ் நாட்டில் பொங்கல் அன்று திரைப்படங்கள் வெளியாவது போல கேரளாவில் ஓணம் நாளில் திரைப்படங்கள் வெளியாகின்றன ஓணம் நாளில் திரைப்படம் வெளியாவதை மலையாள ஹீரோக்கள் பெருமையாக கருதுவார்கள். துல்கர் சல்மானின் தந்தை மம்முட்டி மலையாளத்தில் பல படங்கள் நடித்து அதன் பின் தமிழில் நடிக்க தொடங்கினார்.மம்முட்டி நடிப்பில் வெளியான ஒரு சி பி ஐ டை ரி குறிப்பு தமிழ் நாட்டில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு மம்முட்டிக்கு மௌனம் சம்மதம்,அழகன் , தளபதி என கதவுகள் திறந்தது. ஆனால் து ல் கர் சல்மான் நடிக்க துவங்கிய ஆரம்ப நாட்களிலேயே நேரடியாக தமிழ் நாட்டில் பிரபலமடைந்து ரசிகர்களை பெற்று விட்டார்.தாய் எட்டு அடி என்றால் குட்டி பதினாறு அடி என்பது துல்கர் சல்மானுக்கு பொருந்தும்.