நடிகர் மம்முட்டிதான் தயாரிப்பாளர்களை தொந்தரவு செய்யாத அவர்களுக்கு ஏற்ற நடிகர் என்று இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் RK செல்வமணி பேசியிருக்கிறார்.
மலையாள சூப்பர் ஸ்டாராக விளங்கும் மம்முட்டி 1971ம் ஆண்டு ஒரு கூட்டத்தில் நடிக்கும் ஒருவராக சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் ஏராளமான படங்களில் நடித்த இவர், தமிழ் திரையுலகிலும் தடம் பதித்தார். இவர் தளபதி படத்தில் ரஜினியின் நண்பனாக நடித்து இன்றுவரை தமிழக மக்கள் மனதில் பதிந்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிரம்மயுகம், அப்ரஹாம் ஓஸ்லர் ஆகிய படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகின. குறிப்பாக பிரம்மயுகம் படத்தில் அவர் தனித்துவமான கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.
இவருடைய மகன் துல்கர் சல்மான், சினிமா துறையில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இந்த இரண்டு நடிகர்களையும் பிடிக்காத தென்னிந்திய ரசிகர்களே இல்லை என்றே கூற வேண்டும்.
துல்கர் சல்மான் ஒரு ஹீரோவாக மட்டுமின்றி, நல்ல மனிதராகவும் ரசிகர்கள் மனதில் போற்றப்படுகிறார். இவர் நல்ல மனிதராக இருக்கிறார் என்றால், அவருடைய தந்தையின் வளர்ப்பே காரணம் என்று கூறலாம். வளர்ப்பு மட்டுமா? மம்முட்டியும் நல்ல மனிதர்தானே?
இதுகுறித்துதான் தயாரிப்பாளர் RK செல்வமணி பேசியிருக்கிறார்.
“மம்முட்டி சாருக்கு வேறு யாரும் Chair எடுத்து போடக்கூடாது. அப்படி செய்ய விடவே மாட்டாரு. அவரேதான் எடுத்து போட்டுப்பாரு. படபிடிப்புக்கு அவர கூட்டிட்டு வரும் ட்ரைவர், அப்றம் மேக்கப் மேன் அனைவருக்கும் அவரேதான் சம்பளம் தருவாரு. சாப்பாடு கூட அவரேதான் எடுத்துட்டு வருவாரு. அவர் மிகவும் நல்ல மனிதர். அவர் தயாரிப்பாளர்கள எந்தத் தொல்லையும் பண்ணமாட்டாரு.” என்று பேசினார்.
ஒரு நடிகர், ஷூட்டிங் ஸ்பாட் வருவதற்கான வாகனத்திலிருந்து, அங்கு ஜூஸ் வாங்கித்தருவதிலிருந்து, வீட்டில் சென்று விடும் வரை தயாரிப்பாளர் டீமையும் இயக்குநர் டீமையும் ஆர்டர் போடும் இந்த காலத்தில், மம்முட்டியின் இந்த செயல் உண்மையில் பாராட்டிற்குறியதுதான். நல்ல மனிதர் என்பதற்கான உதாரணம் இவரே!