SilkSmitha
SilkSmitha

#HBDSilkSmitha:எவர்கிரீன் நாயகி சில்க் ஸ்மிதா!

சில்க் ஸ்மிதா...இந்திய திரையுலகில் அழகு, வசீகரம், ட்ரெண்டு செட்டர் என 90களில் கொடிகட்டிப் பறந்த நடன நாயகி. ஆந்திரா மாநிலத்தில் சாதாரண குடும்பத்தில் விஜயலட்சுமி எனும் இயற்பெயர் கொண்ட சில்க்ஸ்மிதா டிசம்பர் 2ம் தேதி பிறந்தார்.

வெறும் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள சில்க், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். நடிகர் வினு சக்கரவர்த்தி மூலம் வண்டி சக்கரம் படத்தில் அறிமுகமான சில்க் துணை நடிகையாகவும் ட்ரூப் நடனக்கலைஞராகவும் களமிறங்கினார்.

திரையுலகில் சில்க் ஸ்மிதா அறிமுகமான சில ஆண்டுகளிலேயே தனது காந்த பார்வை மற்றும் வசீகரமான தோற்றத்தால் ஒரு பாடலுக்கு ஆடும் லீடிங் கவர்ச்சி நடிகையாகவும் கதாநாயகியாகவும் மாறினார். தமிழ் சினிமா மட்டுமல்லாது 80 மற்றும் 90களில் தென்னிந்திய முழுவதும் வெளியான படங்களில் சில்க் இல்லாத சினிமாவே இல்லை என்கிற நிலைக்கு உச்சத்துக்கு வந்தார்.

அக்காலகட்டத்தில் தமிழில் சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்தி எனப் பல முன்னணி நடிகர்கள் சில்க் ஸ்மிதாவுடன் நடிக்க ஆர்வம் காட்டினார்கள். அதேபோல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மற்ற திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களுக்கும் அவர்களுடைய படத்தில் சில்க் ஸ்மிதாவின் ஒரு பாடலாவது இடம்பெறவேண்டும் என சில்க் ஸ்மிதாவின் நாட்களுக்காக காத்து கிடந்தனர்.

தென்னிந்திய மொழி படங்களில் நடித்து அசத்தியது மட்டுமின்றி பாலிவுட்டிலும் பல படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடியும் நல்ல ரோல்களில் நடித்தும் உள்ளார் சில்க் ஸ்மிதா. பொதுவாக சில்ஸ் ஸ்மிதா அந்த காலத்தில் ஐட்டம் பாடல் என்றிழைக்கப்பட்ட கமர்சியல் பாடல்களில் இடம்பெற்றுவந்தார்.

ஆனால், சில்க் ஸ்மிதாவால் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதையும் அவர் நிரூபித்தார். குறிப்பாக, பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை, பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை, கங்கை அமரனின் கோழிகூவுது, சில்க்..சில்க்..சில்க்.., சூரகோட்டை சிங்கக்குட்டி என பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

Silksmitha
Silksmitha

அதேபோல், ஒரு ஆண்டில் அதிகபட்ச படங்களில் நடித்த நாயகி என்ற சாதனையும் சில்க்ஸ்மிதாவுக்கு உண்டு. தன்னுடைய திரை வாழ்க்கையில் மொத்தம் 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அவர். இப்படி இந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி, கொடிகட்டிப் பறந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைக்குள் வந்தார் பாபு. அவரின் வீட்டில் தான் சில்க் ஸ்மிதாவின் உடலும் கண்டெடுக்கப்பட்டது.

மர்ம முடிச்சு அவிழாத சில்கின் மரணம் இன்றும் மர்மமாக இருப்பதே பெரும் வேதனையாகவுள்ளதாகப் பலரும் கருதுகின்றனர். சில்க் ஸ்மிதாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் தற்கொலை என்பதை உறுதிப்படுத்தின. ஆனால் அது உண்மையா இல்லையா என்பதைக் கூற அவருக்கான நெருங்கி நண்பர்கள் இல்லாதது இன்னும் சில்க் ஸ்மிதாவின் மரணம் மர்மமாகவே நீடிக்க காரணமாக உள்ளது.

உயிரிழந்த சில்க் ஸ்மிதாவின் படுக்கையறையிலிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் பாபு தன்னை திருமணம் செய்து கொள்ளாததால் நிம்மதி இல்லை என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் பின் நாளில் விசாரணையில், பாபு சில்க் ஸ்மிதா தான் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை என்று கூறியிருந்தார். கடைசி வரைக்கும் இவரது மரணத்தின் மர்ம முடிச்சி அவிழவே இல்லை.

இப்படி ரசிகர் மனதில் நினைவலையாக உள்ள சில்க் ஸ்மிதா, சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றினார். AI போன்ற அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சில்க் முக ஒற்றுமை கொண்ட விஷ்ணு பிரியா மூலம் படத்தின் சில காட்சிகளில் தோன்றினார் சில்க் ஸ்மிதா.

சில்க் ஸ்மிதா
சில்க் ஸ்மிதாVijay Kumar

80's 90's காலகட்டத்தில் சில்க் ஸ்மிதா திரையில் தோன்றினால் ரசிகர்கள் எப்படி அவரை கொண்டாடுவார்களோ, அதே உற்சாகத்தோடு இந்தக்கால இளைஞர்களாலும் மார்க் ஆண்டனி படத்தில் கொண்டாடப்பட்டார் சில்க் ஸ்மிதா. ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த கலைஞர்களுக்கு என்றும் மரணமில்லை என்பதை மீண்டும் AI சில்க் நிரூபித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com