"உனக்காக தானே இந்த உயிர் உள்ளது" பிஜிஎம் கிங் யுவனுக்கு இன்று பிறந்தநாள்..!

"உனக்காக தானே இந்த உயிர் உள்ளது" பிஜிஎம் கிங் யுவனுக்கு இன்று பிறந்தநாள்..!
Published on

மிழ் சினிமாவில் பின்னணி இசையில் முன்னணியில் இருக்கும் இசை நாயகன் யுவன் ஷங்கர் ராஜா. இவரின் பிறந்த நாளான இன்று இவரின் பின்னணி இசை குறித்தான ஒரு தொகுப்பை பார்க்கலாம்.

தீம் மியூசிக்கில் யுவன் சங்கர் ராஜாவை திரும்பி பார்க்க வைத்த திரைப்படமாக அமைந்தது ‘பில்லா’. யுவன் மற்றும்  அஜித்  கூட்டணியில் உருவான ’மங்காத்தா’ திரைப்படத்தின்  தீம் மியூசிக் இன்றுவரை ஒட்டுமொத்த ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்றாக இருந்து வருவதை பார்க்கலாம்.

'காதலி இறந்த பின்னும், அவள் நினைவோடு வாழும் காதலன்' என்ற கருவில் வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம் ’7ஜி ரெயின்போ காலனி’. காட்சியின் வழியே உயிரை உருக வைத்த செல்வ ராகவன் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் யுவனின் பின்னணி இசை உணர்வுகளை கடத்தி உருக வைத்தது. பின்னணி இசை கேட்போர் மனதிற்குள் ஏதோ மாயாஜாலம் செய்யும் வித்தைகாரன் யுவன் என்று சொல்ல வைத்தது புதுப்பேட்டை… பருத்திவீரன்….,ஆரண்ய காண்டம் உள்ளிட்ட திரைப்படங்கள்.

"கற்றது தமிழ்" படத்தின் பின்னணி இசை ஒவ்வொரு பார்வையாளனையும் ஏதோ ஒரு ரயில் பயணத்தில் ’கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம் உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்’ என பயணிக்க வைத்தது. தமிழ் சினிமாவில் அம்மாவிற்கு "ஆராரிராரோ", அப்பாவிற்கு " தெய்வங்கள் எல்லாம்",மகளுக்கு "ஆனந்த யாழை", காதலின் பிரிவுக்கு " ஒரு கல்..ஒரு கண்ணாடி ",காதலின் துரோகத்துக்கு " என் நண்பனே", என அனைத்து விதமான பாடல்களையும் கொடுத்து அவற்றின் பின்னணி இசையில் இசை ரசிகர்களை ஆட்கொண்ட யுவன் ஷங்கர் ராஜா என்றுமே பின்னணியில் முன்னணியே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com