தமிழ்த் திரையில் தனக்கென்று தனி அடையாளத்தை பிடித்து பன்முகத்தன்மையை வெளிப்படுத்திவரும் இயக்குனர் மிஷ்கின் குறித்து பார்ப்போம்.
நடிகர் மிஷ்கின் எதார்த்தமான எளிய கதைகளை மக்களிடத்தில் சிறப்பாக காட்சிப்படுத்தி கொண்டு சேர்க்கும் திறன் கொண்டவர். இதனாலே இவர் படங்களுக்கு என்று தனி ரசிகர் பேஸ் உள்ளது. நாவல்கள், கதைகள், கட்டுரைகள் என்று புத்தகம் படிக்கும் ஆர்வம் அதிகமாக இருந்ததால் சரவணராசா என்ற தன்னுடைய பெயரை ரஷ்ய கதை ஒன்றைப் படித்துவிட்டு, அந்த கதையில் வரும் கதாபாத்திரத்தின் பெயரான மிஷ்கினை தனது பெயராக மாற்றிக்கொண்டார். அன்று முதல் மிஸ்கினாக மாறி திரைத் துறையில் முக்கிய நபர்களின் ஒருவராக உயர்ந்து இருக்கிறார்.
1971 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி பிறந்த மிஷ்கின் முதல் முறையாக 2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது. பிறகு 2008 ஆம் ஆண்டு அஞ்சாதே, அதைத் தொடர்ந்து நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ போன்ற படங்களை அடுத்தடுத்த இயக்கினார்.
இயக்கத்தோடு மட்டும் நின்றுவிடாமல் நடிப்பிலும் ஆர்வம் செலுத்திய மிஷ்கின், நடிப்பிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்து உயர்ந்தார். சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் மிஷ்கினுடைய நடிப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டை பெற்றது. அதே நேரம் திரைக்கதை எழுதுவதிலும் மிஷ்கின் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவருடைய எழுத்து பாசிட்டிவான விமர்சனங்களை குவித்தது.
இதோடு நின்று விடாமல் அஞ்சாதே தொடங்கி பல திரைப்படங்களில் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகியுள்ள லியோ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மிஷ்கின். இப்படி இயக்கம், நடிப்பு, எழுத்து, பாடகர் என்று திரைத்துறையில் பன்முக அடையாளங்களுக்கு சொந்தக்காரரான மிஷ்கின் சினிமா மீது கொண்டுள்ள காதலால் அவரை சினிமாவின் சைகோ என்றழைக்கவைக்கிறது.