படமாகும் பெருமாள் முருகன் நாவல்!

Writer Perumal Murugan
Writer Perumal Murugan upload.wikimedia.org

ழுத்தாளர் பெருமாள் முருகனின் பூக்குழி நாவலை மையப்படுத்தி இயக்குனர் தமிழ் புதிய படத்தை உருவாக்குகிறார்.

தமிழில் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கும் பெருமாள் முருகன் தனது நாவல்கள் மூலம் மானிட வாழ்வியலையும், அதனுடைய அடையாளத்தையும், செயல்பாடுகளையும், சிந்தனைகளையும் சிறப்பாக உணர்த்துவார். இதனாலையே உலகின் தலைசிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான ஜேசிபி இலக்கிய பரிசை 2023 ஆம் ஆண்டிற்காக தற்போது பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய பூக்குழி நாவலை மையப்படுத்தி இயக்குனர் தமிழ் புதிய படம் இயக்க உள்ளார். தமிழ் சேத்துமான் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றவர். தற்போது எஸ் வினோத்குமார் தயாரிப்பில் பூக்குழி நாவலை மையப்படுத்தி திரைப்படத்தை எடுக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பெங்களூரில் இன்று தொடங்கப்பட்டிருக்கிறது.

Perumal Murugan pookozhi  Novel
Perumal Murugan pookozhi Novel Picasa

மேலும் பயிரிடப்படாத இப்படத்தில் தர்ஷன் நாயகனாகவும், தர்ஷனா ராஜேந்திரன் நாயகியாகவும் நடிக்கின்றனர். படத்தின் இயக்குனர் தமிழ் கூறுகையில், நல்ல கதைகளை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை ஊக்குவிக்கும் செயலை செய்யும் வினோத் குமார் போன்ற தயாரிப்பாளர் இருப்பது பாக்கியம். தற்போது அனைவருக்கும் பிடித்தமான கதையை படமாக மாற்ற இணைந்திருக்கிறோம்.

Sethuman Director Tami
Sethuman Director Tami

இது மக்களின் வாழ்வியலோடு இணைந்ததாக, எதார்த்தமானதாக, மக்களுக்கு பிடித்தமானதாக இருக்கும். இப்படி சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை கொண்ட படத்தை உருவாக்க கிடைத்திருக்கும் வாய்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தை உருவாக்குவதில் ஏற்படும் அற்புதமான அனுபவத்தை எதிர்நோக்கி பயணத்தை தொடங்கி இருக்கிறோம் என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com